• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

4 ஆண்டுகால மோடி அரசு.. சர்ஜிகல் தாக்குதல்களை நடத்திய பாதுகாப்பு அமைச்சகம்

By Mathi
|
  மோடி ஆட்சி மக்களுக்கானது அல்ல..கார்ப்பரேட்டுகளுக்கானது!- வீடியோ

  டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 4 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ளது. ஒரே ரேங் ஒரு ஓய்வூதியம் என்கிற பிரச்சனை மோடி அரசின் முன் பெரும் சவாலாக இருந்தது. இதற்கு தீர்வு கண்டது மோடி அரசுதான்.

  அதேபோல பாகிஸ்தான் மீது சர்ஜிகல் தாக்குதல்களை நடத்தியதும் மோடி அரசுதான்.

  ஒரே ரேங்க் ஒரே ஓய்வூதியம்

  கடந்த ஆண்டு ஒரே ரேங்க் ஒரே ஓய்வூதிய திட்டத்துக்காக மொத்தம் ரூ4,161,45 கோடி; ரூ2,397.22 கோடி; ரூ2,320. 7கோடி; ரூ 1,859 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் நிலுவையில் உள்ள ரூ10,739.09 கோடி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமாக 20,43,354, 2-வது கட்டமாக 15,94,063, 3-வது கட்டமாக 15,71,744, 4-வது கட்டமாக 13,28,313 முன்னாள் ராணுவத்தினர்/ குடும்ப ஓய்வூதியதாரருக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

  Four years in office, resolving OROP and surgical strikes were the highs for the Defence Ministry

  முன்னாள் ராணுவத்தினருக்கான இதர நடவடிக்கைகள்:

  • பிரதமரின் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் 2015-2016 கல்வி ஆண்டில் 4,000-ல் இருந்து 5,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • பெண் குழந்தைகளுக்கான திருமண நிதி உதவியானது ரூ16,000-ல் இருந்து ரூ50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
  • ஆன்லைன் மூலம் உதவித் தொகை பெறுவதற்காக 2016-ம் ஆண்டு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

  ஐஎன்எஸ் கல்வரி

  • கடற்படை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வை 2017-ம் ஆண்டு டிசம்பர் 14 நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • உலகின் அதிவேகமான ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சொனிக் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
  • கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஆகாஷ் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  • இந்தியா ரஷ்யா இடையேயான முப்படைகளின் கூட்டு பயிற்சி இந்திரா வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
  • ராணுவத்தினரை சிறப்பிக்கும் வகையில் ராணுவ கொடிநாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன.
  • கடற்படையில் பெண்கள் இணைக்கப்பட்டு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

  Four years in office, resolving OROP and surgical strikes were the highs for the Defence Ministry

  இதர நடவடிக்கைகள்:

  ராணுவத்தின் பயணங்களுக்காக ஆன்லைனில் பாதுகாப்பு அமைப்புகள் டிக்கெட் புக் செய்யும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டது. ரயில்வே துறை இதை நடைமுறைப்படுத்தியது. ரயில் மற்றும் விமான சேவைகளுக்கும் இது விரிவு படுத்தப்பட்டது.

  5759 பாதுகாப்பு நிறுவனங்கள் இதன் கீழ் வந்துள்ளன. 12,19,969 பேர் இதில் பயனடைந்துள்ளனர். இந்த சிஸ்டம் மூலம் 5.1 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மாதாந்திரம் சராசரியாக ரூ70 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

  தளவாட கொள்முதலை எளிமையாக்குதல் மேக்-II

  பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜனவரி 16-ந் தேதி இது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவத்துக்கான தளவாட கொள்முதலை எளிமையாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

  ரபேல்

  பிரான்ஸ் அரசுடன் இணைந்து 36 ரபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய 2016-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த விமானங்கள் 2019 செப்டம்பர் மற்றும் 2022 ஏப்ரலில் ராணுவத்துக்கு வந்து சேரும். ரபேல் போர் விமானங்கள் நவீனமயமாக்கபட்டவை.

  Four years in office, resolving OROP and surgical strikes were the highs for the Defence Ministry

  அக்னி V

  • 2016-ம் ஆண்டு டிசம்பர் 26-ல் அக்னி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
  • இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றக் கூடியது அக்னி ஏவுகணை

  சர்ஜிகல் ஸ்டிரைக்

  இந்திய எல்லைகளைப் பாதுகாக்கவும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து 2016-ம் ஆண்டு சர்ஜிகல் ஸ்டிரைக் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  Four years in office, resolving OROP and surgical strikes were the highs for the Defence Ministry

  பயங்கரவாதத்தை ஒழிக்கும் சர்ஜிகல் ஸ்டிரைக்

  • 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி ஊரி செக்டாரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி நமது ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இத்தாக்குதலில் கணிசமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  • தீவிரவாதிகளின் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன.
  • இந்தியாவின் இந்நடவடிக்கைக்கு சர்வதேசம் பாராட்டியது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  One Rank One Pension was a huge issue and one of the biggest challenges for the Narendra Modi led NDA government at the Centre which completed four years in office. It was an issue concerning lakhs of ex-servicemen who guarded the nation without fear or favour.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more