For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊர் ஊராக சென்று செல்பி எடுக்கும் மோடிக்கு விவசாயிகளை பார்க்கதான் நேரமில்லை… ஜி. ராமகிருஷ்ணன் காட்டம்

ஊர் ஊராக சென்று செல்பி எடுக்கும் பிரதமர் மோடிக்கு விவசாயிகளை பார்க்க மட்டும் நேரமில்லை என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 37 நாட்களாக பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மண்சோறு சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

சாட்டை அடி

சாட்டை அடி

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி போன்று வேடமணிந்த ஒருவர், விவசாயிகளை சாட்டையால் அடிப்பது போன்று சித்தரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

மனநலம் பாதிப்பு

மனநலம் பாதிப்பு

இதனைத் தொடர்ந்து இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்று விவசாயிகள் தங்களது போராட்டத்தை நடத்தினார்கள். தங்களது சட்டையை கிழித்துக் கொண்டு சாலையில் ஓடுவது போன்று விவசாயிகள் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஜி. ராமகிருஷ்ணன் சந்திப்பு

ஜி. ராமகிருஷ்ணன் சந்திப்பு

இந்நிலையில், 37 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை இன்று டெல்லி சென்ற சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார். அவர்களுடன் அமர்ந்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

செல்பி மோடி

செல்பி மோடி

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், ஊர் ஊராக சென்று செல்பி எடுத்துக் கொள்ளும் மோடிக்கு விவசாயிகளை மட்டும் பார்க்க நேரமில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், விவசாயிகளை தொடர்ந்து மோடி அவமானப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

கார்ப்பரேட் ஆட்சி

கார்ப்பரேட் ஆட்சி

மேலும், மோடி ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை அளிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜி. ராமகிருஷ்ணன், விரைவில் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

English summary
CPM State Secretary G. Ramakrishnan has met protesting farmers at Jantar Mantar in Delhi today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X