Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3000 அடி உயரம்.. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த விநாயகர்.. பூசாரியின் செயலை பாருங்க.. திகில் வீடியோ

3000 அடி உயரத்தில் மலை முகட்டில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு பூசாரி ஒருவர் பூஜை செய்யும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தோல்கால் விநாயகர் சிலை குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

முழு முதற் கடவுளாக விநாயகர் அறியப்படுகிறார். எந்த காரியம் செய்தாலும் அது வெற்றி பெற கஜமுகனை வழிபட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். அது போல் எந்த தெய்வத்தின் கோயிலுக்கு சென்றாலும் கோயிலில் முதலில் இருப்பவரும் மூஷிக வாகனத்தார்தான்.

அவரை வணங்கிவிட்டுத்தான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். இதற்கு புராண கதை இருக்கிறது. அரசமரத்தடி பிள்ளையார் முதல் ஆதிசேஷன் முன்பு இருக்கும் பிள்ளையார் வரை ஒவ்வொரு விசேஷங்கள் உள்ளன.

விநாயகர் கோயில்கள்

விநாயகர் கோயில்கள்

இந்தியாவில் புகழ்பெற்ற பல விநாயகர் கோயில்கள் உள்ளன. எனினும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோயில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் பைலாடிலா மலை தொடரில் இந்த விநாயகர் சிலை அமைந்துள்ளது. இந்த மலையில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது.

3000 அடி உயரம்

3000 அடி உயரம்

இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் காணப்படுகிறது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இந்த மலை முகட்டில் உள்ள இந்த விநாயகர் கோயில் சிறிய முரசு வடிவில் உள்ளது. அதன் மேல் விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த இடத்தை பார்ப்பதற்கே ஒரு வித அச்சம் எழுகிறது. 3000 அடி உயரம் என்றால் சும்மாவா. அதுவும் சிறிய அளவிலான செங்குத்தான பாறையில் அமைந்துள்ளது.

கோயில் பூசாரி

கோயில் பூசாரி

இந்த கோயிலுக்கு பூசாரி ஒருவர் தினமும் வந்து பூஜை புனஸ்காரங்களை செய்கிறார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. மிகச் சிறிய அளவிலான அந்த பாறையில் எப்படியோ ஏறி வந்த பூசாரி நீரால் விநாயகர் சிலையை சுத்தம் செய்கிறார். பின்னர் மலர் வைத்து கற்பூர ஆரத்தி காட்டுகிறார். இந்த ஆரத்தியை பக்தர்கள் எப்படி காண்கிறார்கள் என்றால், அந்த பிள்ளையாரை சுற்றி இடைவெளி விட்டு இடைவெளி விட்டு நிறைய சிறிய பாறைகள் உள்ளன. அந்த பாறை மீது ஏறி நின்று கொண்டு வழிபடுகிறார்கள்.

பூசாரியின் பூஜை

பூசாரியின் பூஜை

மேலே இருந்து கீழே விழுந்தால் அவ்வளவுதான். கரணம் தப்பினால் மரணம் என்ற அளவுக்கு மிகவும் ஆபத்தான இடமாக உள்ளது. அந்த பூசாரி சுத்தப்படுத்தும் நீரில் வழுக்கி விழுந்தால் நினைத்து பார்க்கவே ஈரக்குலை நடுங்குகிறது. இத்தனை ஆபத்துகள் இருந்தும் எத்தனை கடவுள் பக்தியுடன் தன் உயிரை பணயம் வைத்து வந்து பூஜிக்கிறார். அது போல் பக்தர்களும் ஆபத்தை பற்றி கவலைப்படாமல் தெய்வ வழிபாடு நடத்துகிறார்கள். இந்த சம்பவத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளார்கள்.

45 நிமிடங்கள்

45 நிமிடங்கள்

இந்த விநாயகர் கோயிலை அடைய 45 நிமிடங்கள் ஆகுமாம். இந்த கோயில் முரசு வடிவில் இருப்பதால் இந்த விநாயகர் தோல்கால் விநாயகர் என அழைக்கப்படுகிறார். இந்த கோயில் நாக வம்சத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் 9 அல்லது 10 ஆவது நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலை அடைய காட்டு வழியைதான் நாட வேண்டும். இதற்கென சாலை வசதி இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+