யாரு அப்பன் வீட்டு சொத்து?, கெட் அவுட்: ஐஏஎஸ் அதிகாரியிடம் கத்திய கெஜ்ரிவால்
டெல்லி: தன்னை பார்த்து கெட் அவுட் என கோபமாக கத்திய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி கே. ஆர். மீனா தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவராக இருப்பவர் ஐஏஎஸ் அதிகாரியான கே.ஆர். மீனா. அவர் கடந்த 10ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது கெஜ்ரிவால் மற்றும் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் டெல்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஒருவருக்கு அளிக்குமாறு நிர்பந்திக்க மீனா மறுத்தாராம். இதனால் கோபம் அடைந்த கெஜ்ரிவால் கெட் அவுட்(வெளியே போங்க) என்று கத்தினாராம்.
இது குறித்து மீனா கூறுகையில்,
தனது வீட்டிற்கு என்னை அழைத்த கெஜ்ரிவால் கழகத்தின் நிலத்தை தனி நபருக்கு ஒதுக்க முடியாது என்று நான் கூறியவுடன் வெளியே போகுமாறு கத்தினார். அதுவும் டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் முன்னிலையில் கத்தினார்.
கழகத்தின் நிலம் யாருடைய அப்பன் சொத்தும் இல்லை. அதை நல்ல காரியத்திற்காக நாங்கள் பயன்படுத்துவோம் என்றார். என்னை வீட்டிற்கு வரவழைத்து அவமானப்படுத்தியதற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications