"கோஸ்ட் டவுன்ஸ்".. எல்லை கிராமங்களை, மதரஸாக்களை காலி செய்த பாகிஸ்தானியர்கள்.. நீண்ட போருக்கு தயார்?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: பாகிஸ்தானியர்கள் மிக நீண்ட போருக்கு தயாராகி வருவதாக அந்நாட்டு உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா நடத்த போகும் தாக்குதல்கள் மோசமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் நீண்ட போருக்கு தயாராகி வருகிறதாம்.

இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாக். பதற்றம் அடைந்து வரும் நிலையில் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது.

Jammu Kashmir

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

90 நிமிடம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள் - ராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோடி தந்த பவர்

தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரம் உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கையை உள்ளது., உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம்., என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.

ஏற்கனவே கடற்படை பாகிஸ்தான் அருகே களமிறக்கப்பட்டு உள்ளது. ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

போர் அச்சம்:

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.

இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் / ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.

தயார் நிலையில் பாகிஸ்தான்

பாகிஸ்தானியர்கள் மிக நீண்ட போருக்கு தயாராகி வருவதாக அந்நாட்டு உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியா நடத்த போகும் தாக்குதல்கள் மோசமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் நீண்ட போருக்கு தயாராகி வருகிறதாம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பதட்டம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. எல்லைப் பதட்டங்களை காரணம் காட்டி, 1,000க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. முசாபராபாத் மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே உள்ள நகரங்களில், பள்ளி, மதரஸாக்கள் தற்காலிக பயிற்சி முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கே 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவது, முதலுதவி அளிப்பது மற்றும் காயமடைந்த வகுப்பு தோழர்களை ஸ்ட்ரெச்சர்களில் சுமந்து செல்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.

எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சகோதி போன்ற கிராமங்களில், பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். மேலும் பதுங்கு குழிகள் வலுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் பள்ளியிலிருந்து நேராக வீடு திரும்பும் வரை ஆட்கள் வைத்து பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

2 மாதங்களுக்கு உணவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) உள்ள 13 தொகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு, மருந்துகள் மற்றும் பிற அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோஸ்ட் டவுன் என்று அழைக்கும் அளவிற்கு சுற்றுலாத் தலங்கள் ஆட்களே இல்லாத பேய் நகரங்களாக மாறி வருகின்றன. கடைகள் கூட காலியாகி உள்ளன.

பொதுவாக பார்வையாளர்களால் பரபரப்பாகவும், பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றதாகவும் இருக்கும் நீலம் பள்ளத்தாக்கு வெறிச்சோடி உள்ளது. ஹோட்டல்கள் காலியாக உள்ளன. மேலும் உள்ளூர் வாசிகளும் வெளியேறி விட்டனர். பாகிஸ்தானின் செயல்கள் அந்த நாடு மிக நீண்ட போருக்கு தயாராவதை உறுதி செய்கிறது.

Precision Strike:

இதில்தான் Precision Strike முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. Precision Strike முறையில் முதலில் ஒரு பகுதியில் உள்ள தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இடங்கள் உறுதி செய்யப்படும். அதாவது தீவிரவாத கேம்ப் மற்றும் ராணுவ கேம்ப் ஆகியவை மற்றும் குறிக்கப்படும். இப்படி குறிக்கப்பட்ட மையங்கள் அதன்பின் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும். அவை சரியான இடங்களா என்று உறுதி செய்யப்படும்.

உளவு பணிகள் முடிந்த பின் தாக்குதல் திட்டங்கள் வரையறுக்கப்படும். எப்படி உள்ளே செல்வது எப்படி வெளியே வருவது.. என்ன மாதிரியான தாக்குதலை நடத்துவது என்று உறுதி செய்யப்படும். தேதி முடிவெடுக்கப்படாது. விமான தாக்குதல் என்றால் எப்படி உள்ளே செல்வது.. தரைவழி தாக்குதல் என்றால் எப்படி நடத்துவது என்று திட்டம் வகுக்கப்பட்டு பிளான் செய்யப்படும்.

இது உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும். கடைசியாக பிரதமர் ஒப்புதல் அளித்த பின் தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும். தாக்குதல் நடத்தப்படுவது.. தாக்குதல் தினத்தின் 3-4 மணி நேரங்களுக்கு முன்புதான் வீரர்களுக்கே சொல்லப்படும். தாக்குதல்கள் கசிவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நோட்டமிடும் அமெரிக்கா

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரண்டு நாட்டு உறவு வேகமாக மோசமாகி வருகிறது. இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் Tammy Bruce இது தொடர்பாக கூறி உள்ளார். இப்போது நிலைமை மோசமாகிவிட்டது. தற்போது நிலவுவது ஒரு பயங்கரமான சூழ்நிலை. இதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் குறித்து அமெரிக்கா இதுவரை நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

இரண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள். இரண்டு நாடுகளின் கைகளின் அணு ஆயுதம் இருப்பதை விட அவை அருகருகே இருக்கும் நாடுகள். அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நிலைமையை மோசமாகாமல் காக்க வேண்டும் என்று இரு அரசாங்கங்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர ஆலோசனைகள் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+