இந்தியாவா? இந்துக்களின் சவுதி அரேபியா? கொதிக்கும் தஸ்லீமா நஸ்ரின்
மும்பை: மும்பையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் கச்சேரி சிவசேனாவினரின் கடும் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து, பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின், இந்தியா சவுதி அரேபியா போல மாறி வருவதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் குலாம் அலி,74 இவரது கலை நிகழ்ச்சி மும்பையின் சண்முகானந்தா ஹாலில் நடைபெற இருந்தது. பல்வேறு இந்திய சினிமாக்களில் பாடியவரும், புகழ்பெற்ற கசல் பாடகருமான இவரது நிகழ்ச்சியைக் காண மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறி தொடர் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வரும் நிலையில், தங்கள் பகுதியில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சிவ சேனாவின் இந்த நடவடிக்கையால் இந்த கலை நிகழ்ச்சி அதன் ஏற்பாட்டாளர்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின், தஸ்லீமா நஸ்ரின், ''இந்தியா, இந்துக்களின் சவுதி அரேபியாவாக மாறிக்கொண்டிருக்கிறது என கருத்து வெளியிட்டுள்ளார். குலாம் நபி ஒன்றும் ஜிகாதி அல்ல. அவர் ஒரு பாடகர். ஜிகாதிகளுக்கும் பாடகர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.
OMG! Pak Singer Ghulam Ali's Concert in Mumbai Cancelled After Sena Threat? India is becoming Hindu Saudi?
— taslima nasreen (@taslimanasreen) October 7, 2015 இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் நிகழ்ச்சி நடத்த வருமாறு, குலாம் அலிக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி அரசின் கலாச்சார துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. டெல்லிக்கு வந்து நிகழ்ச்சியை நடத்த அவருக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். இசைக்கு எல்லை கிடையாது என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications