For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவில் கட்டடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி - காண்டிராக்டர் மாயம்

Google Oneindia Tamil News

பனாஜி: கோவாவில், கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். கட்டட ஒப்பந்ததாரர் விபத்துக்குப் பின்னர் மாயமாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

பனாஜி அருகே உள்ள கனகோனா என்ற இடத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது 3 மாடிகளைக் கொண்டதாகும். இந்தக் கட்டடம் நேற்று மாலையில் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இடிபாட்டுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். தீயணைபுப் படையினரும், போலீஸாரும் மீட்பு முயற்சிகளில் இறங்கினர். இதில் 11 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்தபோது 50 தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்புப் பணியில் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

நவி மும்பையைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் இந்தக் கட்டடத்தைக் கட்டி வந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தை முதல்வர் மனோகர் பாரிக்கர் நேரில் பார்வையிட்டார்.

English summary
At least 11 people have died and many are still feared trapped under the debris of an under-construction building that collapsed in Goa around 3 pm on Saturday. An FIR has been registered against the builder and the contractor, who the police say have gone missing. According to the police, a portion of the three-storey building, Ruby Residency, located in the Chawdi ward of Canacona town, 60 kilometres from state capital Panaji, collapsed while over 50 workers were working there. 26 people have been rescued so far. Army personnel and fire officials carried out rescue operations through the night to look for more survivors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X