நிஜ பிரச்சினைகளை மோடி எப்படி திசை திருப்பி விடுகிறார் பாருங்க.. ராகுல் காந்தி தாக்கு
பனாஜி: பிரதமர் மோடி கோவா மக்களை உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புகிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கோவா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தில் இருந்து கோவா விடுதலை பெறுவதற்கு ஜவஹர்லால் நேரு உதவவில்லை என கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி.
இதற்கு கோவா பிரசாரத்தில் ராகுல் காந்தி, கோவா மக்களை பிரதமர் மோடி திசை திருப்புவதாக பதிலளித்துள்ளார். வரலாறு தெரியாமல் பிரதமர் பேசுவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி
போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க காங்கிரஸ் அரசு 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது என தெரிவித்தார். இந்நிலையில், கோவாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், '' அந்தக் கால வரலாறு அவருக்குப் புரியவில்லை.

திசை திருப்புகிறார்
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கோவாவில் சுரங்கத்தை நிலையான மற்றும் சட்டப்பூர்வமான வழியில் மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளோம். மக்களை திசைதிருப்பும் உரையாடலில் நான் ஈடுபடமாட்டேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் எனது கவனம் உள்ளது. இம்முறை அறுதிப் பெரும்பான்மை பெற்று, கோவாவில் ஆட்சி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

கோவா
40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் களத்தில் மோதி வருகின்றன.

நேரு
இந்தியா சுதந்திரம் அடைந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகே கோவா நமது நாட்டுடன் சேர்ந்தது. கோவாவில் சத்தியாகிரக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது கூட ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு. அவரால்தான் சுதந்திரத்துக்குப் பிறகும் கோவா கூடுதலாக 15 ஆண்டுகள் அடிமையாக இருந்தது என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். இதையே அமித்ஷாவும் பிரசாரத்தில் பேசி வருகிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications