For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவில் 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 2 டெல்லி பெண்கள் பகீர் வாக்குமூலம்

By Siva
Google Oneindia Tamil News

பனாஜி: தங்களை நிர்வாணமாக்கி, மதுவும், போதைப் பொருளும் கொடுத்து பலாத்காரம் செய்ததாக கோவாவில் 5 பேரால் சீரழிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 2 பெண்கள் தெரிவித்துள்ளனர்.

கோவாவில் விடுமுறையை கழிக்க வந்த இடத்தில் டெல்லியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் போன்று நடித்த 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சீரழிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

கடத்தல்

கடத்தல்

நாங்கள் பாகா கடற்கரைக்கு சென்றபோது எங்கள் டாக்சியை அந்த 5 பேரும் வழிமறித்து டிரைவரை அடித்தனர். அதன் பிறகு ஒருவர் எங்களை ஊருக்கு வெளியே இருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மற்றவர்கள் பைக்குகளில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களின் போன்கள், ஏடிஎம் கார்டுகள், பணத்தை எடுத்துக் கொண்டனர். எங்கள் கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரமும், டாக்சி டிரவைரிடம் பறித்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரத்தையும் எடுத்தனர்.

வீடியோ

வீடியோ

அந்த 5 பேருடன் ஒரு பெண்ணும் இருந்தார். அவரும் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறினார். அந்த பெண் சோதனை செய்வதாகக் கூறி என் ஆடையை அவிழ்த்தார். அவர்கள் எங்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தனர்.

போதைப்பொருள்

போதைப்பொருள்

அவர்கள் எங்களுக்கு குடிக்க தண்ணீருக்கு பதில் மதுவை அளித்தனர். பின்னர் போதைப் பொருள் கொடுத்து 5 பேரும் எங்களை ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர்.

கொடுமை

கொடுமை

5 பேரும் ஈவு, இரக்கமின்றி எங்கள் பலாத்காரம் செய்தனர். எனக்கு ரத்தப் போக்கு ஏற்படும் வரை அவர்கள் நிறுத்தவில்லை என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் அந்த பெண்களை 3 நாட்களாக கண்காணித்து அதன் பிறகு அவர்களை கடத்தி சீரழித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
Two Delhi women who were gang-raped in Goa have told the police that they were stripped, drugged ad raped brutally by 5 men.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X