வெயில் காலம்.. சாமி சிலைகளுக்கு ஏசி.. உத்தர பிரதேச கோவில்களில் கடவுள்களுக்கு புதிய வசதி
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள கோவில் ஒன்றில் சாமி சிலைக்கு ஏசி வைத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கான்பூர்: உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள கோவில் ஒன்றில் சாமி சிலைக்கு ஏசி வைத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் கோவிலில் உள்ள விநாயகர் சிலைக்கு இப்படி ஏசி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் மிகவும் மகிழ்ச்சியை கொடுப்பதாக, அந்த கோவில் நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த கோவிலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஏன் ஏசி வைக்கப்பட்டது என்பதற்கு அந்த கோவில் நிர்வாகம் முக்கியமான காரணம் ஒன்றையும் கூறியுள்ளது.

ஏசி
இதில் கோவிலில் ஒரு இடத்தில் மட்டுமில்லை, கோவிலின் மூன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளில் இது போல ஏசி வைத்து இருக்கிறார்கள். மூலவர் சிலைக்கு அருகிலும், இன்னொரு கடவுள் அறையிலும், நந்தி அருகிலும் ஏசி வைத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். கடவுளுக்காக மட்டும் அமைக்கப்பட்ட ஏசி என்று இதை கூறியுள்ளனர்.

ஏன் வைக்கிறார்கள்
இதற்கு கோவில் நிர்வாகம் காரணம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி கோவிலில் சாமிகளுக்கு வியர்க்கும் என்று சீரியஸாக பதில் அளித்துள்னனர். அந்த பகுதியில் கோடை காலம் என்பதால் வெயில் மிகவும் அதிகமாகி உள்ளது. இந்த வெயிலில் இருந்து சிலைகளை (சாமிகளை)பாதுகாக்கும் பொருட்டு உட்பகுதியில் சாமிகளுக்காக ஏசி பொருத்தி இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அதிக வெப்பநிலை உள்ளது.

உதவி
இதை கோவில் நிர்வாகம் வைத்து இருந்தாலும், மக்களும் இந்த ஏசி வைக்க உதவி இருக்கிறார்கள். மக்கள் இதற்காக நிதி உதவி அளித்துள்ளனர். கோவில் பணத்தை வைத்து மட்டும் இந்த ஏசியை வாங்கவில்லை என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அதேபோல் கோவில் உண்டியலில் உள்ள பணம் எதையும் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர் கான்பூர் கோவில் நிர்வாகிகள்.
|
இன்னும் வைப்பார்கள்
தற்போது இந்த திட்டம் உத்தர பிரதேச மாநிலம் முழுக்க தொடர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள சில முக்கிய கோவில்களில், லக்னோ பகுதிகளில் இருக்கும் ராமர் கோவில்களில் இந்த ஏசி வைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதற்கான செலவை உத்தர பிரதேச மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications