For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்போனில் இன்டெர்நெட் வேகத்தை 4 மடங்கு அதிகரிக்க போகிறது கூகுள் லைட்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: டேட்டாவை குறைவாக பயன்படுத்தி, வேகமாக இயங்கும் வகையில் தேடுபொறி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இது கூகுள் லைட் என அழைக்கப்படும் எனவும் கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் சர்ச் லைட் மூலம் நான்கு மடங்கு வேகமாக தேடல்களை மேற்கொள்ள முடியும் என கூகுள் அறிவித்திருக்கின்றது. இந்த புதிய முறை இந்தியாவில் இந்த மாதம் முதல் செய்லபட துவங்க உள்ளது.

Google to speed up webpage load time on mobile in India

வாடிக்கையாளர்கள் மொபைலில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைந்தால் புதிய அம்சம் தானாக பக்கங்களை எளிமையாக்குவதோடு இதன் மூலம் பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தையும் அதிகரிக்க முடியும் என கூகுள் நிறுவனத்தின் சர்ச் ப்ராடக்ட் மேனேஜர் ஹிரோடோ டொகுசெய் தெரிவித்தார்.

இதே முறையை இந்தோனேஷியாவிலும் சோதனை செய்யப்பட்டது, அங்கும் பக்கங்கள் நான்கு மடங்கு வேகத்தில் லோடு ஆனதோடு 80 சதவீதம் வரை டேட்டா குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றது என்றும் ஹிரோடோ தெரிவித்தார்.

English summary
Search giant Google will start rolling out a new feature in India to speed up web pages within the next two weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X