40% 'சிட்டி'சன்கள் இன்னும் யாருக்கு ஓட்டுப் போடுவது என்றே முடிவு செய்யவில்லையாம்!
டெல்லி: நகர்ப்புற இந்தியாவில் 40 சதவீத வாக்காளர்கள் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்யவில்லை என்று ஒரு சர்வே கூறியுள்ளது.
கூகுள் இந்தியா இந்த சர்வேயை நடத்தியுள்ளது.
மேலும் இந்த சர்வேயில் நரேந்திர மோடியைத்தான் அதிகம் பேர் கூகுள் சர்ச்சில் தேடியுள்ளதாகவும் இந்த சர்வே கூறுகிறது.

லோக்சபா தேர்தலையொட்டி
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில் கூகுள் இந்தியா இந்த சர்வேயை நடத்தியுள்ளது.

6 மாதத்தில் அதிகம் தேடப்பட்ட மோடி
இந்திய அரசியல்வாதிகளிலேயே நரேந்திர மோடியைத்தான் அதிகம் பேர் கடந்த 6 மாதங்களில் கூகுள் சர்ச்சில் தேடியுள்ளனராம்.

2வது இடம் ராகுல் காந்திக்கு
இதில் 2வது இடத்தில் ராகுல் காந்தியும், தொடர்ந்து சோனியா காந்தி, மன்மோகன் சிங், அரவிந்த் கேஜ்ரி்வால் ஆகியோரும் வருகின்றனர்.

6வது அரசியல்வாதி அகிலேஷ் யாதவ்
உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இந்த வரிசையில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அதிகம் தேடப்பட்ட பாஜக
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கூகுள்வாசகர்கள் அதிக அளவில் தேடிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 2வது இடம் காங்கிரஸுக்கும், 3வது இடம் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கும் கிடைத்துள்ளது.

டாப் 10ல் 4 பேர் காங்கிரஸ்
அதிகம் தேடப்பட்ட 10 அரசியல் தலைவர்களில் நான்கு பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

42 சதவீதம் பேர் முடிவெடுக்கவில்லை
நகர்ப்புற இந்திய வாக்காளர்களில் 42 சதவீதம் பேர் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று இன்னும் முடிவு செய்யவில்லையாம். அதேசமயம், அரசியல் கட்சிகளைப் போலவே வேட்பாளர்களையும் முக்கியமாக பரிசீலிப்போம் என்று இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.

பிரதமர் வேட்பாளர்.. 11 சதவீதம் பேரே ஆதரவு
பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை 11 சதவீதம் பேர் மட்டுமே சொல்லியுள்ளனர்.

7000 இன்டர்நெட் பயனாளர்களிடம்
108 தொகுதிகளைச் சேர்ந்த 7000 இன்டர்நெட் பயனாளர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம் தேவை
நகர்ப்புற வாக்காளர்கள், தங்களது தொகுதி வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் இன்டர்நெட்டில் இடம் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications