For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்கிறதா? செல்போன் எண், ஆதார் விவரம் வழங்க ரெடியாகுங்கள்! அரசு கெடுபிடி

தற்போதுள்ள சேமிப்பு கணக்குதாரர்களில் 65 விழுக்காடு அளவுக்கே செல்போன் நம்பரை கொடுத்துள்ளனர். 50 சதவீத வாடிக்கையாளர்கள்தான் ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சேமிப்பு கணக்கு வைத்துள்ளோர் அனைவரும் செல்போன் மற்றும் ஆதார் எண்ணை வங்கிகளுக்கு மார்ச் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடுபிடி விதித்துள்ளது. மேலும், மொபைல் பேங்கிங் வசதியை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றும், அரசு கூறியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சேமிப்பு கணக்குதாரர்களில் 65 விழுக்காடு அளவுக்கே செல்போன் நம்பரை கொடுத்துள்ளனர். 50 சதவீத வாடிக்கையாளர்கள்தான் ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர்.

Government asks banks to enable m-banking for all by March 31

சேமிப்பு வங்கி கணக்கு வைத்துள்ளோரில் 20 சதவீதம்பேர் மட்டுமே, மொபைல் பேங்கிங் வசதி வைத்துள்ளனர். எனவே ஆதார் எண்ணையும், செல்போன் எண்ணையும் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் மூலம் அனைவருக்கும் மொபைல் பேங்கிங் வசதி கொடுக்கப்படும்.

டிஜிட்டல் இந்தியா என்ற கனவை நோக்கி நகர மொபைல் பேங்கிங் வசதி அவசியம் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

அதேநேரம், வாடிக்கையாளர்களை வங்கிக்கு உடனடியாக வர வைத்து அவர்களுக்கு நெருக்கடி தராமல் வங்கிகள் சுமுகமாக இதை நடத்திக் காட்ட வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்ிடக்காட்டப்பட்டுள்ளது.

English summary
The government has instructed banks to link all savings accounts with mobile and Aadhaar numbers by March 31, 2017, and enable mobile banking for such customers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X