For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி மீண்டும் உயர்வு: விலையில் மாற்றமில்லை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை உயர்த்தியது மத்திய அரசு. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 2.25. டீசலுக்கு ஒரு ரூபாய் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான உற்பத்தி வரி கடந்த மாதம் ரூ 1.50 உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயராது என தகவல் வெளியாகியுள்ளது.

Govt hikes excise duty on petrol by Rs 2.25, diesel by Rs 1

இது குறித்து மத்திய அரசு கூறியிருப்பதாவது: டீசல் லிட்டருக்கு ரூ.1ம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.25ம் உற்பத்தி வரி உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.70ல் இருந்து ரூ.4.95 ஆக உயர்ந்துள்ளது. வரிவிதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

முன்னதாக உற்பத்தி வரியை கடந்த நவம்பர் 13ஆம் தேதி மத்திய அரசு உயர்த்தியிருந்தது . தற்போது மீண்டும் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பினால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
The government on Tuesday raised excise duty on petrol and diesel once again. It had last raised excise duty on petrol and diesel by Rs 1.50 a litre each to help it achieve the fiscal deficit target for this year on November 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X