Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காப்பான் பாணியில் வெட்டுக்கிளிகள் பயங்கரம்.. அழிக்கப்படும் பயிர்கள்.. குலைநடுங்கும் விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Locust threats in Gujarat and Rajasthan

    அமிர்தசரஸ்: காப்பான் பட பாணியில் பாகிஸ்தானில் இருந்து மொத்தமாக பறந்து வரும் வெட்டுக்கிளிகள்.. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சில மணி நேரத்தில் மொத்த பயிர்களை அழித்து நாசம் செய்து அதிரவைத்தன... இப்போது அவை பஞ்சாபில் முகாமிட்டு பயிர்களை அழித்து வருவதால், விவசாயிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

    லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தற்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி படையெடுத்து வந்துள்ளன.

     gujarat and rajasthan and punjab faces locust attack, crops destroyed with in few hours

    அவை குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த ஏராளமான ஏக்கர் பயிர்களை நாசம் செய்தன. பல ஊர்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து அழித்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    சில மணி நேரத்திலேயே ஒரு தோட்டத்தில் உள்ள மொத்த பயிர்களையும் நாசம் செய்வதை கண்ட விவசாயிகள் அலறி துடிக்கின்றனர். நன்றாக விளைந்த கதிரை மொத்தமாக ஒருவர் அறுவடை செய்து கொண்டு போவதைப்போல் வெட்டுக்கிளிகள் நாசம் செய்வதால் அவற்றை எப்படி விரட்டுவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து போய் இருக்கிறார்கள்.

    குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பயிர்களை அழித்து வந்த வெட்டுக்கிளிகள் அடுத்ததாக பஞ்சாப் மாநிலத்தை குறிவைத்துள்ளன. பஞ்சாப்பின் பாஷில்கா, முக்த்சார், படிண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் பயிர்களை வெட்டுக்கிளிகள் அழித்து வருகின்றன. அந்த பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி மொத்தமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து தங்கள் பயிர்களை காப்பாற்ற அரசு உரிய வழிமுறைகளை தெரிவிக்க வண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

     gujarat and rajasthan and punjab faces locust attack, crops destroyed with in few hours

    இதனிடையே பயிர்களில் வெட்டுக்கிளிகள் தாக்கம் தென்பட்டால் உடனடியாக குயினால்பாஸ் 0.05 சதவீதம் அல்லது மாலத்தியான் 0.1 சதவீதம் அல்லது கார்ப்பரில் 0.2 சதவீதம் கலந்து பயிரில் தெளித்தால் பயிர்களை காப்பாற்ற முடியும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் நாற்றங்கால்களில் வலை போட்டு வைத்தாலும் பாதுகாக்க முடியும் என்றும் வேளாண்துறை தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+