
குஜராத் சட்டசபை தேர்தல்: 8ஆவது முறையாக பாஜக ஆட்சி? புதிய வரலாறு படைக்கத் தயாராகும் தாமரை
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
182 சட்டசபையை கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 63.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து இறுதி கட்ட வாக்கு பதிவு கடந்த 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி நடந்தது. இதில் 58.68 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இரு கட்டங்களையும் சேர்த்து 66.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குஜராத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸும் ஆம்ஆத்மியும் தீவிரம் காட்டி வருகின்றன.
யார் ஜெயிப்பாங்கன்னு நாளைக்கு தெரியும்.. நீங்களே பாருங்க! குஜராத் தேர்தல் பற்றி பகவந்த் மான் ஆரூடம்

25 ஆண்டுகள்
தொடர்ந்து 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் மேலும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடர பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. குஜராத்தில் தமிழர்கள் வசிக்கும் தொகுதிகளில் பெரும்பாலும் பாஜகவுக்கே ஆதரவு அலை வீசுகிறது. இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை வகித்தது. அது போல் குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளில் 152 இடங்களில் பாஜகவும் காங்கிரஸ் 21 இடங்களிலும் ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

8ஆவது முறை
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 8ஆவது முறையாக பாஜகவே ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் இப்போதே வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ கருத்து கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு பாஜகவை தோற்கடிப்போம் என உறுதியாக நம்புகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்தே 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் என தேர்தல் வியூகங்கள் வெளிப்படுத்துகின்றன. குஜராத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 37 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்றைய தினம் எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.

வெல்ல போவது யாரு
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் வியூகங்கள் வெற்றி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருவதால் குஜராத் தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபடவில்லை. அவருக்கு பதிலாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டார். எனவே இந்த தேர்தலில் ஜெயிக்க போவது யாரு?