For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50,000 பேருடன் மெகாபிளான்.. மார்க்கெட்டிங் மாணவர்களை விடலையே! குஜராத் பாஜகவின் பிரசார வியூகம்..ஆஹா

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி நடந்து வரும் நிலையில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக மெகா பிளான் வகுத்துள்ளது. இதற்காக கல்லூரிகளில் பயிலும் மார்க்கெட்டிங் மாணவர்கள் உள்பட 50,000 பேரை வைத்து அசத்தலான பிளானை பாஜக செயல்பட்டு வருவது எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம்ஆத்மியை அலற செய்துள்ளது.

குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், டிசம்பர் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜக காயத்ரிக்கு ஒரு நீதி! திருச்சி சூர்யா சிவாவுக்கு ஒரு நீதியா? மக்கள் நீதி மய்யம் கடும் விமர்சனம் பாஜக காயத்ரிக்கு ஒரு நீதி! திருச்சி சூர்யா சிவாவுக்கு ஒரு நீதியா? மக்கள் நீதி மய்யம் கடும் விமர்சனம்

பாஜக தீவிர பிசாரம்

பாஜக தீவிர பிசாரம்

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர். குஜராத்தில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பாஜக மக்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பெரிய தலைவர்கள் மேடை பிரசாரங்களை செய்யும் நிலையில் வேட்பாளர்கள் உள்பட மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் தெருதெருவாகவும், வீடு வீடாகவும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் குஜராத் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

வலைதள பிரசாரம்

வலைதள பிரசாரம்

இந்நிலையில் மாநிலத்தில் சமூக வலைதள பிரசாரத்திலும் பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் சமூக வலைதளங்களில் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கும் கட்சியாக பாஜக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல், பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் சமூக வலைதள பிரசாரங்களை பாஜக தீவிரமாக செய்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இது அக்கட்சி நல்ல ரிசல்ட்டையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் தான் குஜராத் தேர்தலிலும் பாஜக சமூக வலைதள பிரசாரத்தை மிகவும் தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

மார்க்கெட்டிங் மாணவர்கள்

மார்க்கெட்டிங் மாணவர்கள்

இதற்காக பாஜக சார்பில் சமூக வலைதள பிரசாரத்துக்காக வார்ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவு மாணவர்கள் 100க்கும் அதிகமானவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக இணையதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயது கொண்டவர்கள். கல்லூரிகளின் அனுமதியுடன் முறையான பயிற்சியுடன் இவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வரை இந்த பணியை செய்து வருவதாக கூறப்படுகிறது. தெற்கு குஜராத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் என நான்கு மண்டலங்களில் வார்ரூம் அமைக்கப்பட்டு சமூக வலைதள பிரசாரங்கள் தீவிரமாகி உள்ளது.

மொத்தம் 50,000 பேர்

மொத்தம் 50,000 பேர்

குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள், தற்போதைய மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான அம்சங்கள் நிறைந்த விஷயங்களை இவர்கள் தயார் செய்து இணையதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களை நன்கு கவனித்து அதற்கு பதிலளிக்கும் வகையிலான கண்டென்ட்களை உருவாக்கி வெளியிட்டுகின்றனர். இந்த வார்ரூம் குழுவினருக்கு கீழ் சமூக ஊடக பிரிவின் குழுவில் 10,000 கட்சி தொண்டர்கள் அதனை டிரெண்ட் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உள்பட மாநிலம் முழுவதும் தேர்தல் சமயத்தில் மட்டும் 50,000 தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பாஜக பற்றிய நற்செய்திகளை பகிர்ந்து வாக்கு திரட்ட உள்ளனர்.

வலைதள பிரிவு தலைவர் கூறுவது என்ன?

வலைதள பிரிவு தலைவர் கூறுவது என்ன?

இதுபற்றி குஜராத் பாஜக சமூக வலைதள பிரிவு தலைவரும், ஒருங்கிணைப்பாளருமான பங்கஜ் சுக்லா கூறுகையில், ‛‛ சமூக வலைதள பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டவர்களின் பிரசார பேச்சுக்கள் அனைத்து மக்களுக்கு சென்று சேர இது கைக்கொடுக்கிறது. உரிய பயிற்சியுடன் பணியமர்த்தப்பட்ட மாணவர்கள் தேர்தல் முடியும் வரை எங்களுடன் சேர்ந்து பயணிக்க உள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் மொத்தம் 50,000 கட்சி தொண்டர்கள் சமூக வலைதள பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்காக பாஜகவில் சமூக வலைதள பக்கங்கள் துவங்கப்பட்டுள்ளன'' என்றார்.

விடாத காங்கிரஸ்-ஆம்ஆத்மி

விடாத காங்கிரஸ்-ஆம்ஆத்மி

குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியும், டெல்லி, பஞ்சாப் வெற்றி களிப்பில் களம் புகுந்துள்ள ஆம்ஆத்மியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த கட்சியினரும் சமூக வலைதள பிரசாரங்களை கையில் எடுத்து உள்ளது. பாஜகவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களும் இணையதள பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. இதனால் குஜராத்தில் வீதிக்கு வீதி தேர்தல் ஜூரம் அதிகமான நிலையில் தான் சமூக வலைளதங்களிலும் அரசியல் பேச்சு களைட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After 27 years of BJP rule in Gujarat, BJP has made a mega plan to regain power. For this, the BJP is working on an amazing plan with 50,000 people, including marketing students studying in colleges, which has made the opposition Congress and Aam Aadmi Party scream.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X