ஜெயிக்கணும்.. குஜராத்தில் 79 கோடீஸ்வரர்களை களமிறக்கிய பாஜக..பிரமிக்கும் காங்கிரஸ்-ஆம்ஆத்மி! வியூகம்
காந்திநகர்: குஜராத்தில் 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதில் பாஜக 79 தொகுதிகளில் கோடீஸ்வரர்களை களமிறக்கிய நிலையில் காங்கிரஸ், ஆம்ஆத்மியும் சளைக்காமல் குரோர்பதிகளுக்கு வாய்ப்பு வழங்கி இருப்பதும், பாஜக வேட்பாளராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபாவின் சொத்து மதிப்பு விபரங்களும் தற்போது வெளியாகி பிரமிக்க வைத்துள்ளன.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 2வது கட்டமாக டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 93 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

788 வேட்பாளர்கள் போட்டி
இந்நிலையில் தான் தற்போது தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக பாஜக, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் முதற்கட்டமாக தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளில் மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்னர். இந்நிலையில் தான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை ஏடிஆர் (ADR) எனும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.

211 பேர் கோடீஸ்வரர்கள்-பாஜகவில் அதிகம்
அதன்படி முதற்கட்ட தேர்தலுக்காகன 788 வேட்பாளர்களில் 211 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இது மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பார்த்தால் 27 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதில் அதிகபட்சமாக பாஜகவில் தான் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அதன்படி 89 தொகுதிகளில் பாஜகவில் 79 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இது பாஜகவின் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 89 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக காட்டுகிறது.

காங்கிரஸ்-ஆம்ஆத்மியில்...
பாஜகவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 65 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 73 சதவீதமாகும். ஆம்ஆத்மியில் 33 வேட்பாளர்களாக உள்ளனர். 89 தொகுதியில் 88 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 38 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

ரூ.5 கோடிக்கு அதிகமானவர்கள்
குஜராத் தேர்தலில் 73 வேட்பாளர்கள் ரூ.5 கோடிக்கு அதிகமான சொத்துகளாகவும் கொண்டவர்களாகவும், 77 வேட்பாளர்கள் ரூ.2 கோடிக்கும் ரூ.5 கோடிக்கும் மத்தியில் சொத்துகள் கொண்டவர்களாவும் உள்ளனர். மேலும் 125 வேட்பாளர்கள் ரூ.50 லட்சத்துக்கும் ரூ.2 கோடிக்கும் இடையேயான மதிப்பில் சொத்துகள் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கட்சிவாரியாக பார்த்தால் பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.40 கோடியாகும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.38 கோடியாகவும், ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.1.99 கோடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா மனைவி சொத்து
இதில் மிகப்பெரிய கோடீஸ்வர வேட்பாளராக பாஜகவின் ரமேஷ் திலாலா உள்ளார். ராஜ்கோட் தெற்கு தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் திலாலாவின் சொத்து மதிப்பு ரூ.175 கோடியாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஜ்கோட் கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இந்திராணில் ராஜ்குரு ரூ.162 கோடிக்கு சொத்துகள் வைத்துள்ளார். 3வது இடத்தில் மானாவதார் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஜவஹர் சாவ்தாவின் சொத்து மதிப்பு ரூ.130 கோடியாக உள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார். இவர் ரூ.97 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பூஜ்ஜியம் மதிப்பு
மேலும் ராஜ்கோட் மேற்கு சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கிய பூபேந்திர படோலியா தனக்கு சொத்து எதுவும் இல்லை என கூறியுள்ளார். பிரமாணபத்திரத்தில் அவர் தனது சொத்து மதிப்பை பூஜ்ஜியம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் வியாரா (தனி) தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ராகேஷ் காமித் ரூ.1000 எனவும், பாவ் நகர் மேற்கு தொகுதியில் ஜயெபின் போிரசா என்பவர் தனது சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரம் எனவும் சூரத் கிழக்கு தொகுதியில் போட்டியிடடும் சமிர் செய்க் என்பவர் தனது சொத்து மதிப்பு ரூ.6,500 எனவும் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications