குஜராத்தில் பாஜகவின் அசுரத்தனமான வெற்றி.. ஆஹோ ஓஹோ என புகழும் சர்வதேச ஊடகங்கள்
காந்திநகர்: குஜராத்தில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 15 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவின் இந்த பிரம்மாண்டமான வெற்றி சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது.
குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.

156 இடங்களில் வென்று வரலாற்று சாதனை
தொடர்ந்து 6 முறை ஆட்சியில் இருக்கும் பாஜக இந்த முறையும் வென்று 7-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின. இது அப்படியே மக்கள் மனதை பிரதிபலித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதை விட அசுரத்தனமான பெரும் வெற்றியை பாஜக பதிவு செய்தது. கடந்த 2017- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 99 தொகுதிகளில் வென்றிருந்த பாஜக இந்த முறை 156 இடங்களில் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

பூபேந்திர படேல் தலைமையில்
கடந்த 2002 ஆம் ஆண்டு தேர்தலின் போது நரேந்திர மோடி தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட போது 127 இடங்களில் பாஜக வென்று இருந்தது. இதுவே பாஜகவின் சிறந்த வெற்றியாக இருந்த நிலையில், தற்போது புதிய சாதனையை பாஜக பூபேந்திர படேல் தலைமையில் நிகழ்த்தியுள்ளது. பாஜக கட்சி ஆரம்பித்த பிறகு அக்கட்சி குஜராத்தில் இப்படி ஒரு இமாலய வெற்றியை பதிவு செய்தது நாடு முழுவதும் உற்று கவனிக்க வைத்தது.

17 இடங்களில் மட்டுமே காங்கிரஸ்
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 15 மாதங்களே உள்ளதால், பாஜகவின் இந்த பெரும் வெற்றி பாஜகவிற்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 1995, 1998, 2002, 2007, 2012, 2017,2022 என தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. வெறும் 17 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதேபோல், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சர்வதேச ஊடகங்களிலும் கவனம்
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவிற்கு இந்த வெற்றி முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அந்த வகையில், பாஜகவே எதிர்பார்த்திராத ஒரு வெற்றியை அக்கட்சி பெற்றுள்ளது. பாஜக குஜராத்தில் பெற்ற வெற்றி இந்திய ஊடகங்களில் மட்டும் இல்லை. சர்வதேச ஊடகங்களிலும் கவனம் பெற்றுள்ளது. பிரிட்டன் பத்திரிகையான தி கார்டியன் குஜாரத்தில் பாஜக பெற்ற வெற்றியை சுட்டிகாட்டி வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு என்ற வகையில் செய்தி வெளியிட்டுள்ளது .

தோல்வியே சந்திக்காமல் தொடர் வெற்றி
1995- ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் பாஜக தோல்வியே சந்திக்காமல் தொடர் வெற்றிகளை பெற்று வருவது பற்றி ஜப்பானின் நிக்கோய் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல இண்டிபெண்டண்ட் ஏபிசி நியூஸ் பாஜக தொண்டர்களின் வெற்றி கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை பகிர்ந்துள்ளது. சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் நாளிதழ், அல் ஜசீரா, ஏபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியையும் அக்கட்சி தொண்டர்கள் ஆரவராமகாக கொண்டாடும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications