குஜராத்தில் நிலநடுக்கம். வீடுகள், கட்டிடங்கள் குழுங்கியதால் மக்கள் அதிர்ச்சி
அஹமதாபாத: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இன்று (வியாழன்) இரவு 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இன்று இரவு 7.13 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் குழுங்கியதால் ஜாம்நகர் பகுதி மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் போய் நின்றார்கள். இந்த நிலநடுக்கம் தவர்க்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது..

ஜாம்நகரில் இதுவரை உயிர்ச்சேதம் அல்லது சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) நில நடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதை உறுதி செய்தது. முன்னதாக ஜம்மு காஷ்மீரிலும் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டது .












Click it and Unblock the Notifications