விஜய்யுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி.. காங்கிரஸில் எழுந்த கலக குரல்.. யார் இந்த பிரமுகர்?
சென்னை: காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் கலகக்குரல் எழுந்துள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் இந்த நடவடிக்கையை சந்தர்ப்பவாதம் என்று விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்றது. கட்சி சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும் கட்சியாக வந்தாலும் கூட மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. இதனால் விஜய் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், விசிக, பாமகவிடம் ஆதரவு கோரியுள்ளார்.
இதில் முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் மொத்தம் 29 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியை விட்டு இன்று வெளியேறிய காங்கிரஸ் விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று சென்னையில் விஜய்யை சந்தித்து பூங்கொத்து கொடுத்து ஆதரவு கொடுத்தனர். விஜய்யுடன் வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதன்மூலம் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிடம் தற்போது 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் தவெகவின் பலம் சட்டசபையில் 113 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையானதாக உள்ளது. விரைவில் பிற கட்சிகள் ஆதரவை தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் விஜய் இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்.
இதற்கிடையே தான் திமுக கூட்டணியை முறித்து தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதை ஒரு தரப்பினர் கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்த கூட்டணிக்கு எதிராக முதல் கலகக்குரல் வெளிவந்துள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல்புகாரி தனது எக்ஸ் பக்கத்தில், ''கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது'' என கூறியுள்ளார்.
Principles define politics
— Adv. Alim Albuhari (@AlimAlbuhari) May 6, 2026
not opportunism.
கொள்கைப் பிடிப்பே அரசியல்,
சந்தர்ப்பவாதம் அல்ல.
Principles define our politics not opportunism. BJP and AIADMK are practicing opportunism not us now.
இதே சந்தர்ப்பவாதத்தை, பா.ஜ.க வும் அதிமுகவும் செய்து வருகிறது.
இப்போது நாம் அதை…
இந்த பதிவில் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய் பானு சிப் ஆகியோரை 'டேக்' செய்துள்ளார்.
-
இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு வைகோ கொடுத்த பதில் -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
மாஸ்டர் மகேந்திரன் திடீரென்று மன்னிப்பு கேட்ட காரணம் இதுதானா? பின்னணியில் விழுந்த "டோஸ்”! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!












Click it and Unblock the Notifications