69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கு: தண்டனை விவரம் நாளைமறுநாள் அறிவிப்பு
அகமதாபாத்: குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நாளை மறுநாள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அப்போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மொத்தம் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர். ஒருவரைக் காணவில்லை.
கடந்த 2-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் 24 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும் 36 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
24 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஆனாலும் தண்டனை விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 24 பேரில் 11 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பு வாதிட்டிருந்தது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications