Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பானிபட்டில்...வேலை தேடிச் சென்ற இளைஞரின் கையில் 786 டாட்டூ...கை துண்டிப்பு!!

Subscribe to Oneindia Tamil

பானிபட்: அரியானா மாநிலத்தில் பானிபட் என்ற இடத்தில் வேலை தேடிச் சென்ற இளைஞர் முஸ்லிம் என்பதாலும் அவரது கையில் 786 என்ற டாட்டூ வரைந்திருந்த காரணத்துக்காகவும் அவரது கைகளை துண்டித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

இதுமட்டுமில்லை முதல் தகவல் அறிக்கையில், 7 வயது சிறுவனை இக்லக் சல்மானி என்ற அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது சகோதரர் இக்ராம் சல்மானி கூறுகையில், ''எனது சகோதரர் 28 வயது இக்லக் சல்மானி முஸ்லிம் என்பதால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அதற்காக அவரது கைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Hand Chopped Off Over 786 Tattoo on youths hand in Haryana

எனது சகோதரருக்கு 28 வயதாகிறது. சவரத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வேலை தேடி ஆகஸ்ட் 25 ஆம் தேதி பானிபட் சென்று இருந்தபோது அவரது கைகளை துண்டித்துள்ளனர். பானிபட்டில் இருந்து 33 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் சஹரன்பூரில் இருந்து எனது சகோதரன் வேலை தேடிச் சென்று இருந்தார்.

சென்று கொண்டு இருக்கும்போது இருட்டிவிட்டதால், கிஷன்புராவில் இருக்கும் பார்க்கில் படுத்து விட்டார். இருவர் அப்போது அங்கு வந்த இருவர் அங்கு தூங்கக் கூடாது என்று தடுத்துள்ளனர். எனது சகோதரரை அதற்காக கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து நிலை குலைந்து கீழே விழுந்த எனது சகோதரர் பார்க் அருகில் இருக்கும் வீடுகளில் தண்ணீர் வாங்கி குடிப்பதற்காக சென்றார். அங்கிருந்த வீட்டின் கதவை தட்டினார். அப்போது இவரை பார்க்கில் தாக்கிய இருவர் கதவை திறந்துள்ளனர். எனது சகோதரனைப் பார்த்தவுடன் வீட்டுக்குள் இழுத்துப் போட்டு, கடுமையாக தடியால் தாக்கி, கற்களால் தலையிலும் தாக்கியுள்ளனர். அவர்களிடம் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார். இரண்டு பெண்கள் உள்பட ஆறு பேர் சேர்ந்து ஒருவனை தாக்கியுள்ளனர்.

அப்போது எனது சகோதரனின் வலது கையில் பிஸ்மில்லாவைக் குறிக்கும் 786 என்ற டாட்டூ இருப்பதைப் பார்த்துள்ளனர். அதில் ஒருவர் இந்த டாட்டூவை அவரது கையில் இருந்து எடுத்து விடுவோம் என்று கூற, கத்தியால் வலது கையை அறுத்துள்ளனர். இதையடுத்து எனது சகோதரன் இறந்து விட்டதாகக் கருதி கிஷன் புராவில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றனர். மயக்கத்தில் இருந்து தெளிந்த பின்னர் அங்கு சென்று கொண்டு இருந்தவர்களிடம் உதவி கேட்டு, குடும்ப விவரங்களை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பானிபட்டில் இருக்கும் சாந்தினி பாக் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் ஓடியதில் எனது சகோதரனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தற்போது கூறுகின்றனர். மாநில அரசின் உதவியுடன் இதை மறைப்பதற்காக பார்க்கின்றனர். எனது சகோதரரின் கையை மட்டும் அவர்கள் துண்டிக்கவில்லை. அவனது எதிர்கால கனவையும் சிதைத்துள்ளனர். எங்களுக்கு நீதி வேண்டும். உண்மையை அறிய தாக்கியவர்களின் வீட்டுக்கு அருகே சென்று விசாரித்தேன். எனது சகோதர் தாக்கப்பட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்'' என்றார்.

ஆனால், தாக்கியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ''எனது 7 வயது உறவினர் மகனுடன் உறங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது திடீரென அவனை காணவில்லை. குடும்பத்தினரிடம் கூறினேன். தேடிசென்றபோது அரை கி. மீட்டர் தொலைவில் அந்த சிறுவனை பாலியல் பலாத்காரத்துக்கு இக்லக் வற்புறுத்தியுள்ளார். இருவரும் ஆடை இல்லாமல் அப்போது இருந்தனர்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த 14 நாட்களுக்குப் பின்னர் இக்லக் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவி அனைவரும் இக்லக்கிற்கு நீதி கேட்டு பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+