பாலியல் புகாரில் சிக்கிய ஹரியானா பாஜக தலைவர் மகன்.... நடு இரவில் பெண்ணை துரத்தி அட்டூழியம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தின் பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகனை போலீசார் பாலியல் புகாரில் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலத்தின் பாஜக தலைவர் சுபாஷ் பராலா. இவரது மகன் விகாஸ் பராலா. விகாஸும் அவருடைய நண்பர் ஆசிஷ் குமார் என்பவரும் நள்ளிரவு 12 மணியளவில் பெண் ஒருவரை காரில் பின்னாலேயே சென்று துரத்திச் சென்றுள்ளனர்.

 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாவதாக வந்தார் உசைன் போல்ட்...ரசிகர்கள் அதிர்ச்சி!

இதனால் பயந்துபோன அந்தப்பெண், உடனே செல்போன் மூலம் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து புகார் அளித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணைத் துரத்திச் சென்ற விகாஸ் பராலா மற்றும் ஆஷில் குமாரை கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் இருவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை அதிகமாக நடக்கும் மாநிலங்களில் சண்டிகர் மாநிலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hariyana state bjp leader Subash's son Vikas was arrested in sexual harassment case.
Please Wait while comments are loading...