ஹர்னாஸ் சந்து: 21 ஆண்டுகளுக்கு பின் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்றது இந்தியா
'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்துக்காக 70ஆம் ஆண்டாக நடந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது.
பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் படம் படித்து வருகிறார். இவருக்கு வயது 21.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் படம் வென்றிருந்தார் ஹர்னாஸ் சந்து.
https://twitter.com/MissUniverse/status/1470227063789563907
21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் 2000வது ஆண்டில் லாரா தத்தா வென்றிருந்தார். அதற்கு முன் சுஸ்மிதா சென் இந்தப் பட்டத்தை 1994ல் வென்றிருந்தார்.
தமது பெற்றோர், கடவுள் மற்றும் மிஸ் இந்தியா அமைப்புக்கு தாம் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளதாக பட்டத்தை வென்ற ஹர்னாஸ் சந்து கூறியுள்ளார்.
இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்றைய அழுத்தங்களுக்கு அவர் அளிக்கும் ஆலோசனை என்ன என்று போட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "தங்களை நம்ப வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய அழுத்தம். நாம் வேறுபட்டவர் என்பதை அறிவது உங்களை அழகாக்கும். பிறருடன் ஒப்பிட்டுக்கொள்வதை நிறுத்திவிட்டு, நம்மைச் சுற்றிலும் நடப்பவை பற்றி பேசத் தொடங்குவோம்," என்று பதிலளித்தார் ஹர்னாஸ் சந்து.
பிற செய்திகள்:
- மோதி - புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா?
- 450 குவாட்ரில்லியன் கிமீ நீளம் கொண்ட பூஞ்சை வலையமைப்புகள்
- மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும்
- மோதி - புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













Click it and Unblock the Notifications