For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளுக்காக வாக்கு சேகரித்த அரியானா காங். பெண் அமைச்சர் மீது மர்மநபர்கள் கல் வீசி தாக்குதல்

Google Oneindia Tamil News

Haryana minister Kiran Chaudhary injured in stone pelting
நர்நூல்: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டுப் பிரச்சாரம் மேற்கொண்ட அரியானா பெண் அமைச்சர் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் அமைச்சருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அரியானா மாநிலத்தில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. எனவே அங்குள்ள கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், அரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சரான கிரண் சவுதாரி தனது மகளும், காங்கிரஸ் எம்.பி.மான சுருதி சவுதாரிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சவுதாரி முன்னாள் முதல்வர் பான்சி லாலுவின் மகள் ஆவார்.

இந்நிலையில் நேற்று கோரியாவாஸ் கிராமத்தில் பிரசாரம் செய்த கிரண் சவுதாரி மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சவுதாரிக்கு கை, நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கியிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்று கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சவுதாரி சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக குர்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கற்களை வீசி பெண் அமைச்சர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
Haryana Public Health Minister Kiran Chaudhary was seriously injured on Wednesday evening, when some unidentified miscreants pelted stones at her while she was campaigning in Koriyavas village, nearly 7 km from here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X