For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிக் பஜார் நிறுவனத்திற்கு பேங்க் லைசென்ஸ் கொடுத்தது யார்? சீதாராயம் யெச்சூரி கிடுக்கிப்பிடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிக் பஜாரின் நிறுவனத்தின் ரீ டெயில் கடைகளில் நாளை முதல் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி அதிகபட்சமாக ரூ. 2000 பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கண்டித்துள்ளார்.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு வந்தன.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பணம் எடுக்க வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் அலைமோதி வருகின்றனர். வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் போதிய பணம் கிடைக்கவில்லை.

பிக் பஜாரில் பணம்

பிக் பஜாரில் பணம்

எனவே, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இனி பிக் பஜாரில் நாளை முதல் டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. ஒருவர், டெபிட் கார்டு மூலம் அதிகபட்சமாக ரூ.2000 பணம் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.

யெச்சூரி காட்டம்

யெச்சூரி காட்டம்

இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கண்டித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் காட்டமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். https://twitter.com/SitaramYechury/status/801085157184663555

என்ன நடக்கிறது இங்கு? இந்த தனியார் நிறுவனத்திற்கு, வங்கி லைசென்ஸ்சை ஆர்.பி.ஐ கொடுத்ததார்? இந்த தனியார் நிறுவனத்திற்கு மட்டும் ஏன் அனுமதி?. இவ்வாறு சீதாரம் யெச்சூரி ஒரு டிவிட்டில் கூறியுள்ளார்.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

மற்றொரு டிவிட்டில் யெச்சூரி கூறியுள்ளதையும் பாருங்கள்: https://twitter.com/SitaramYechury/status/801085532235120640 ரீடெய்ல் நிறுவனத்தில் பணம் விநியோகம் செய்வது பிரச்சினை இல்லை. மோடி அரசு, போதிய அளவுக்கு நோட்டுக்களை வங்கிகள், ஏடிஎம்களுக்கு வழங்காததே பிரச்சினை.

கிராமங்களுக்கு தேவை பணம்

தனியார் ரீடெய்லருக்கு பணம் வழஹ்கும் இந்த தமாஷுக்கு பதிலாக, கிராமப்புற வங்கிகளுக்கும், ஏடிஎம்களுக்கும் மோடி அரசு கூடுதல் நோட்டுக்களை வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார் சீதாராம் யெச்சூரி.

English summary
What is going on? Has this private company given a banking license by the RBI? Why only this one private company? asks Sitaram Yechury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X