தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும் ஹாசனம்பா கோவில் - இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் தரிசனம்
தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஹாசன்: ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தனர்.
பொதுவாக பிரசித்தி பெற்ற கோவில்கள் எல்லாம் பெரும்பாலும் நாள்தோறும் திறக்கப்பட்டு வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆகம விதிமுறைகளின் படி பூஜை, அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவது நடைமுறை. அதிலும் மிகவும் பழமையான கோவில்களில் எல்லாம் தினந்தோறும் ஐந்து அல்லது ஆறு வேளைகளில் ஆகம விதிமுறைகளை சிறிதும் மீறாமல் பூஜைகள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

இதில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் மட்டும் நாள் தோறும் கோவில் நடை திறக்கப்பட்டாலும் கூட என்றைக்காவது விசேஷ நாட்களில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சில கோவில்கள் மட்டும் விதிவிலக்காக வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நாட்களில் இந்த கோவிலின் நடை மூடப்பட்டிருக்கும்.
தீபாவளி பண்டிகை நேரத்தில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் முடிந்த பிறகு கோவில் நடை சாத்தப்படும்போது ஏற்றப்படும் தீபம், ஓராண்டு கழித்து மறு தீபாவளிக்கு நடை திறக்கப்படும் வரையிலும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பதும், அம்மனுக்கு அணிவிக்கும் பூவும் வாடாமல் அப்படியே இருக்கும் என்பதும் ஆச்சரிய அதிசயமாகும்.
இத்தகைய சிறப்பு பெற்ற ஹாசனாம்பா கோவில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது. மன்னர் குடும்பத்தை சேர்ந்த நஞ்சராஜ அர்ஸ் வாழை மரத்தை வெட்டி, பாரம்பரிய முறைப்படி கோவில் நடையை திறப்பது வழக்கம். பின்னர் மன்னர் குடும்பத்தினர் சார்பில், ஹாசனாம்பா கோவிலுக்கு முதலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின்னர், அரசு கருவூலத்தில் உள்ள நகைகள் பாதுகாப்பாக எடுத்து வந்து, ஹாசனாம்பா சிலைக்கு அணிவிக்கப்படும்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை சில தினங்களில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஹாசனாம்மா கோவில் 28ஆம் தேதி மதியம் 12.19 மணிக்கு ஹாசனாம்பா கோவில் கருவறை திறக்கப்பட்டது. அப்போது கடந்தாண்டு நடைமூடும் போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அப்படியே இருந்தது. பின்னர் கோவில் கருவறை சுத்தப்படுத்தப்பட்டு ஹாசனாம்பா தேவிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கோபாலய்யா, சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சசிகலா ஜோலே மற்றும் பிரீத்தம் கவுடா எம்எல்ஏ மாவட்ட ஆட்சியர் ஆர்.கிரீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஆர். சீனிவாஸ்கவுடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர்.
ஹாசனாம்பா கோவிலில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கோவிலில் பொதுமக்களுக்கு தடுப்பூசி எடுத்து கொள்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8 நாட்களும் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.
ஹாசனாம்பா மற்றும் சித்தேஷ்வரர் கோவில்களை புதுப்பிக்க முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். கோவிலின் ஏற்றப்படும் தீபமே அம்மனின் சக்திக்கு சாட்சி. ஹாசனாம்பா தேவியிடம் மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்துள்ளேன் என்று அமைச்சர் சசிகலா ஜோலே கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications