For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாகூப் தூக்கிலிடப்பட்டார்: ட்விட்டரில் முதலிடத்தில் டிரெண்டாகும் 'YakubHanged'

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதையடுத்து #Yakubhanged(யாகூப் தூக்கிலிடப்பட்டார்) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் முதலிடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனையில் இருந்து தப்ப அவர் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சிறையில் யாகூப் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார்.

இந்நிலையில் ட்விட்டரில் #Yakubhanged(யாகூப் தூக்கிலிடப்பட்டார்) என்ற ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

கிரிமினல்

ஒரு கிரிமினல் தூக்கிலிடப்பட்டார். ஒரு சிறந்த மனிதரின் உடல் இன்னும் சில மணிநேரத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. #YakubHanged என்று சரத் பாலன் தெரிவித்துள்ளார்.

நீதி

93 குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு இன்று தான் உண்மையான நீதி கிடைத்துள்ளது #vandemataram #YakubHanged என்று பாலிவுட் நடிகை முக்தா கோட்சே ட்வீட் செய்துள்ளார்.

அரசியலமைப்பு

#YakubHanged இந்திய அரசியலமைப்பிற்கு பெருமையான தருணம் என்று கௌஸ்தப் மகாஜன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஓம் சாந்தி

பலியான 257 பேரின் ஆத்மாக்களுக்கு இன்று ஓம் சாந்தி #YakubHanged என சுரேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நாடகம்

நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த நாடகம் இந்திய நீதித் துறையின் ஒருமைப்பாட்டுக்கு முன்பு எந்த சக்தியும் நிற்க முடியாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

#YakubHanged என்கிறார் அசோக் பண்டிட்.

பழி

ஒருவரை தூக்கிலிடுவது நீதி அல்ல...இது பழிவாங்குவது ஆகும்... நல்லா பழிவாங்கிவிட்டீர்கள் #YakubHanged என ஆக்ரிதி தெரிவித்துள்ளார்.

English summary
#Yakubhanged, a hashtag used by twitteratis to share their views about 1993 Mumbai serial blasts accused Yakun Memon's execution, was a top trend on Twitter on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X