For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளம் போன்று நிலநடுக்கம் ஏற்பட்டால் 90% மக்கள் பலியாவார்கள். டெல்லிக்குஉயர்நீதி மன்றம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி : அண்மையில் நேபாளத்தில் நிகழ்ந்தது போன்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 90 % மக்கள் கொல்லப்படுவார்கள் என உயர்நீதி மன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றம் இந்திய தலைநகரின் பாதுகாப்பு பற்றிய தனது கவலையை வெளியிட்டுள்ளது.

delhi highcourt

மேலும் இது பற்றி நீதிபதிகள் பாதர் அகமது மற்றும் சஞ்சீவ் சச்தேவா கூறியுள்ளதாவது...

உள்ளாட்சி அமைப்புகள் தெரிவித்த தகவல்படி டெல்லியில் 75 % கட்டிடங்கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றி கட்டப்படவில்லை.

டெல்லியில் உள்ள மொத்த கட்டிடங்களில் 10-15 சதவீத கட்டடங்கள் மட்டுமே முறையான சட்ட விதிகளின் படி கட்டப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது மிகப் பெரிய இயற்கை பேரிடர் நடப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் காத்திருப்பது போல் உள்ளது.

மேலும் நேபாளத்தில் ஏற்பட்டது போன்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் பத்தில் ஒன்பது கட்டடங்கள் இடிந்துவிடுவதுடன், டெல்லியில் வசிக்கும் 90 % மக்கள் கொல்லப்படுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் நிலநடுக்க அபாயம் அதிகம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் டெல்லி 4-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Expressing alarm over a report that a Nepal-like quake could wipe out 90 percent of the population here, Delhi High Court on Wednesday rapped the Centre, the city government and municipal bodies, saying they were waiting for disasters to happen as only 10-15 percent buildings in the capital complied with the building bye-laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X