For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேஷனல் ஹெரால்டு வழக்கு.... "நான் இந்திராவின் மருமகள்.. யாருக்கும் அஞ்சமாட்டேன்... 'தில்' சோனியா

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்த கேள்விக்கு நான் இந்திரா காந்தியோட மருமகள்.. எவரை கண்டும் அஞ்சமாட்டேன் என பதிலளித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை யின் ரூ5,000 கோடி சொத்துகளை அபகரித்துள்ளதாக சோனியா, ராகுல் மீது பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் வரும் 19-ந் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராக சோனியா, ராகுலுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Herald case: Not scared, I am Indira’s daughter-in-law, says Sonia

முன்னதாக இந்த வழக்கில் நேரில் ஆஜராவதற்கான சம்மனை எதிர்த்து இருவரும் தொடர்ந்த மனுக்களை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு குறித்து டெல்லி செய்தியாளர்களிடம் இன்று சோனியா காந்தி கூறியதாவது:

நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து நான் அஞ்சப் போவதில்லை... யான் யாருக்கு பயப்பட வேண்டும்.. நான் இந்திரா காந்தியின் மருமகள்... எவரை கண்டும் பயப்படமாட்டேன் என்றார். இது அரசியல் பழிவாங்கலா என்ற கேள்விக்கு, அது உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்

புதுச்சேரியில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இது அரசியல் பழிவாங்கல் மட்டுமே.. இதற்கு நாடாளுமன்றத்தில் நான் பதிலளிப்பேன் என்றார்.

English summary
Sonia Gandhi said that, Why should I be scared of anyone? I am Indira Gandhi’s daughter-in-law, I am not scared of anyone on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X