ஒடிசா ரயில் விபத்து: சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த பிறகு ரயில்வே அமைச்சர் சொன்ன தகவல்
கொல்கத்தா: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறினார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், 233 பேர் பலியாகி உள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கோரவிபத்து காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடிய விடிய மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் கூறியதாவது:-

மீட்பு பணிகளில் தான் எங்கள் கவனம் உள்ளது. உயர் மட்ட குழு விரிவான விசாரணை நடத்தும். ரயில் பாதுகாப்பு ஆணையர் சுதந்திரமான விசாரணை நடத்துவார். விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பின்னர் தெரியவரும். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் " என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications