வெறும் உள்ளாடையுடன்.. டக்குனு வீட்டுக்குள் போன 4 பேர்.. அதென்ன கையில்? செம ஹைலைட்.. விழித்த போலீஸ்
நாசிக்: சிசிடிவி கேமரா காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஆனால், காவல்துறைக்கு குழப்பத்தை தந்து வருகிறது.. இது தொடர்பாக நாசிக் போலீசாரின் விசாரணையும் துரிதமாகி உள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் கைவரிசையை காட்டி வருகிறது "உள்ளாடை கும்பல்".. இவர்கள் எப்போதுமே பெண்களின் உள்ளாடையை அணிந்து கொண்டுதான் திருடுவார்களாம்.

உள்ளாடைகள்: பெண்களின் கவுன், ஷார்ட்ஸ், ஸ்கர்ட்டுகள் போன்றவற்றை அணிந்தே திருடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.. பல்வேறு இடங்களில் கைவரிசையை காட்டிய இந்த கும்பல், தற்சமயம் நாசிக் மாவட்டம், மாலேகாவில் புகுந்துள்ளது.. அந்த பகுதியில் பெண்களின் கவுன் அணிந்து கொண்டு, கடந்த வாரமாகவே திருட்டு காரியத்திலும் ஈடுபட்டுள்ளது..
இவர்கள் பார்ப்பதற்குதான் பெண்கள் உடை அணிந்திருக்கிறார்களே தவிர, அவர்கள் கையில் கூர்மையான ஆயுதங்களை வைத்திருக்கிறார்களாம்.. இதனால், மாலேகாவ் மக்கள், கடந்த ஒரு வார காலமாகவே பயத்திலும், அச்சத்திலும் இருந்தனர். இந்த கும்பல் யாரென்றே தெரியவில்லை... அதனால், போலீஸாரும் இவர்களை 1 வார காலமாக தேடி வருகிறார்கள்.. இப்படித்தான் நேற்றைய தினமும் நாசிக் அருகே உள்ள மாலேகான் பகுதியில் நுழைந்து, பல்வேறு வீடுகளில் திருடியிருக்கிறது இந்த உள்ளாடை கும்பல்.
திருட்டு சம்பவம்: இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவாகியிருக்கிறது.. நேற்றைய தினம் 4 பேர் கொண்ட கும்பல், வழக்கம்போல் வெறும் உள்ளாடைகள் அணிந்தபடி அந்த பகுதியில் வலம் வந்துள்ளது. இந்த நடமாட்டங்கள் அனைத்துமே அந்த கேமிராவில் பதிவாகியிருக்கிறது. அப்போது, அந்த கும்பலில் ஒருவர் யாராவது வருகிறார்களா? என்று என்று கண்காணிக்கிறார்.. மற்ற 3 பேரும், ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த அந்த வீட்டிற்குள் திருட நுழைகிறார்கள்.
4 பேருமே வெறும் உள்ளாடைகள் அணிந்திருந்தனர். ஆனால், தங்கள் முகங்களை மறைத்துள்ளனர்.. அவர்களின் கைகளில் கூர்மையான ஆயுதங்கள் உள்ளன.. அந்த வீட்டிற்குள் நுழைந்து, கொள்ளையடித்துவிட்டு, பிறகு, கேஷூவலாக அங்கிருந்து கிளம்பி செல்கிறார்கள்.. அந்த வீட்டிற்குள் 5 லட்சம் ரூபாய் உட்பட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.. இதில் ஹைலைட் என்னவென்றால், அவர்கள் கொள்ளையடித்ததில் வாழைப்பழங்களும் அடக்கம்..
ஹைலைட்: அந்த வீட்டில் வைத்திருந்த வாழைப்பழங்களையும் சேர்த்தே தூக்கி செல்கிறார்கள்.. இது அத்தனையும் கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால், இதே ஸ்டைலில், அந்த பகுதியிலுள்ள காலேஜ் ஒன்றிலும் கொள்ளை நடந்திருக்கிறது. அதனால், காலேஜ் பகுதியில் உள்ள சிசிடிவியையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.. இரு கும்பலுமே ஒன்றுதானா? என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், ஆண்கள் உள்ளாடையுடன் கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்றும் அதே பகுதியில் திரிகிறதாம்.. பெண்கள் உள்ளாடை கும்பலுக்கும், ஆண்கள் உள்ளாடை கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா? அலலது வேறு வேறா? என்று தெரியாமல், நாசிக் போலீசாரே உச்சக்கட்டத்துக்கு குழம்பி போயிருக்கிறார்களாம்...!!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications