For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்..! திடீரென ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு.. அப்படியே தரைமட்டமான பாலம் - 9 பேர் பலி.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அப்படியே தரைமட்டமானது. இதில் சிக்கி 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    Himachal landslide: திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு.. அப்படியே தரைமட்டமான பாலம்

    இமாச்சல பிரதேசத்தில் 10 நாட்களுக்கு முன் திடீரென மேகவெடிப்பு காரணமாகக் கனமழை பெய்திருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருந்தது.

    காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால் மோசமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் காலநிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

    கேரளாவில் கொட்டும் கனமழையால் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - நிலச்சரிவு அபாயம் கேரளாவில் கொட்டும் கனமழையால் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - நிலச்சரிவு அபாயம்

    9 பேர் பலி

    9 பேர் பலி

    இந்நிலையில், இமச்சால பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்லா பள்ளத்தாக்கில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

    வைரல் வீடியோ

    இந்த நிலச்சரிவு வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பெரிய பாறைகள் உடைத்து கீழே பள்ளத்தாக்கில் உருண்டு விழுகிறது. இதில் அங்கிருந்த பாலம் அப்படியே தரைமட்டமாகிறது. சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கின்னார் எஸ்பி சஜு ராம் ராணா தெரிவித்துள்ளார்.

    வானிலை ஆய்வு மையம்

    வானிலை ஆய்வு மையம்

    இமாச்சல பிரதேசத்தில் வரும் நாட்களில் கனமழை பெய்யவுள்ளதாகவும் இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மண் அரிப்பு காரணமாக இமாச்சல பிரதேசத்தில் சமீப காலங்களில் அதிகளவில் நிலச்சரிவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    பருவநிலை மாற்றம்

    பருவநிலை மாற்றம்

    இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு புதிய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதில் நூற்றுக் கணக்கானோர் பலியாகினர். மேலும், பல ஆயிரம் பேரின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Himachal landslide Bridge Hit By Boulders Rolling Down Hill, 9 Tourists DeadNine tourists were killed and several were injured after a massive landslide hit a bridge in Himachal Pradesh's Sangla valley. Video of the landslide is now viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X