காங்கிரசுக்கு ‛‛செக்’’.. தமிழ்நாட்டை பாருங்க மக்களே.. இமாச்சல் தேர்தலில் பிரதமர் மோடி பரபர பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சிம்லா: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ‛செக்' வைத்து பரபரப்பாக பேசினார்.

இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் உள்ளார். நாளை மறுநாள் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் உள்ள 68 சட்டசபை தொகுதிகளிலும் நவம்பர் 12ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.

மும்முனை போட்டி

மும்முனை போட்டி

நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளதால் இன்றுடன் பகிரங்க பிரசாரம் ஓய்கிறது. மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆம்ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது. இதனால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இங்கு ஆட்சியமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் காங்கிரஸ், பாஜக இடையே நேரடியாக போட்டி நிலவி வருகிறது.

 பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலையொட்டி நேற்று பிரதமர் மோடி 2 பொதுக்கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் சுஜான்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

 காங்கிரஸ் மீது தாக்குதல்

காங்கிரஸ் மீது தாக்குதல்


காங்கிரஸ் கட்சி இயல்பிலேயே வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது. காங்கிரஸ் என்றால் நிலையற்ற தன்மை, ஊழல், முறைகேடு என்பதற்கு உதாரணமாகவும், வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானதாகவும் உள்ளது. காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது இமாச்சல பிரதேசத்தில் அநீதி செய்து உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்துள்ளது. ஆனால் பாஜக இமாச்சல பிரதேச மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் மீண்டும் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும். மாநிலத்திலும், மத்தியிலும் இரட்டை என்ஜின் பாஜக அரசால் இமாச்சல பிரதேச மாநிலம் இன்னும் அதிக வளர்ச்சியை பெறும்.

 நிலையான ஆட்சி இல்லை

நிலையான ஆட்சி இல்லை

இதனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம். இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை. இதனை பாஜக தான் வழங்கும். காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது. தற்போது காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. இங்கும் பதவிக்காக தலைவர்கள் போட்டியிட்டு வருகின்றனர். வளர்ச்சி பணிகளும் நடந்தததாக தெரியவில்லை.

தமிழ்நாட்டை பாருங்க..

தமிழ்நாட்டை பாருங்க..

தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை மக்கள் விரட்டி உள்ளனர். இது கட்சி மீதான கோபத்தினால் தான் நடந்துள்ளது. உத்தரகாண்ட் மக்களின் மனநிலையும் மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் உத்தராண்ட் மாநில மக்கள் மீண்டும் பாஜகவை தேர்வு செய்தனர். இதனால் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்றம் அடைய முடியும். இதனால் பாஜகவை ஆதரிக்க வேண்டும்'' என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+