ஹிமாச்சல பிரதேச அழகை ரசிக்கப் போய் உடல் நசுங்கி பலியான டாக்டர் தீபா சர்மா - வைரலாகும் புகைப்படங்கள்
ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் ராட்சத பாறை உருண்டு விழுந்து சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்து நிகழ்வதற்கு முன்பு டாக்டர் தீபா எடுத்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் இயற்கை அழகை ரசித்து விட்டு திரும்பும் முன்பாகவே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ராட்சத பாறைகள் உருண்டு வந்து சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வேனை நசுக்கி உயிரை பறித்துள்ளது. மரணமடைவதற்கு முன்பாக வேனில் பயணம் செய்த ஆயுர்வேத மருத்துவர் தீபா சர்மா ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
தென்மேற்கு பருவமழை நாட்டின் பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா கோவா, அசாம், அருணாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்தக் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எப்போது எங்கு நிலச்சரிவு ஏற்படுமோ என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளது. ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கின்னார் மாவட்டத்தின் சங்லா பள்ளத்தாக்கில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது.

பயங்கர நிலச்சரிவு
நிலச்சரிவு காரணமாக சங்லா பள்ளத்தாக்கில் உள்ள பட்சேரி பாலம் இடிந்து விழுந்தது. மலையில் இருந்த உருண்டு வந்த ராட்சத பாறைகள் சுற்றுலா பயணிகள் சென்ற டெம்போ வேனில் விழுந்து நசுக்கியது.
பாறைகளும் கற்களும் புழுதியோடு உருண்டு வருவதும் பாலம் உடையும் காட்சிகளின் வீடியோவும் வேன் மீது விழும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டாக்டர் தீபா சர்மா
இதில் சம்பவ இடத்திலேயே டெம்போவிலிருந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சுற்றுலா சென்ற ஆயுர்வேதா மருத்துவர் தீபா சர்மாவும் பலியாகி விட்டார்.
|
தீபா சர்மாவின் போட்டோக்கள்
ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர் சுற்றுலாவுக்காக ஹிமாச்சலப் பிரதேசம் வந்திருக்கிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர் அங்கு போட்டோக்கள் எடுத்து அதனை ட்விட்டரில் பதிவிட்டிருந்திருக்கிறார்.

எல்லை அருகில்
இயற்கை அன்னையின் அழகுக்கு மற்றதெல்லாம் ஒன்றுமில்லை என்று பதிவிட்டுள்ளார் தீபா சர்மா. அவரது போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. பலரும் அதனை பகிர்ந்துள்ளனர்.

எல்லை அருகில்
அதுபோல நேற்றைய தினம் 25ஆம் தேதி நண்பகல் 12.59 மணிக்கு அதாவது பாறை விழுந்து விபத்து நடைபெறுவதற்கு முன்பாக நகஸ்டி செக் பாய்ண்டில் நின்று போட்டோ எடுத்து அதை பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோவை ட்விட்டரில் பதிவிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

கடைசி பதிவு
அவர் தனது கடைசி பதிவில், இதுதான் இந்திய எல்லையின் கடைசி இடம். இங்கு வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த இடத்திலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் திபெத்தில் இந்திய எல்லை உள்ளது. ஆனால் அதனை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பாறை நசுக்கியதில் உயிரிழந்து விட்டார். இவரது ட்வீட்களையும் போட்டோக்களையும் ரீட்வீட் செய்து நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications