For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெஞ்சுல சுடுங்க.. முதுகில் குத்தாதீங்க.. இது என்னோட இந்தியாவே அல்ல.. பரூக் அப்துல்லா ஆவேசம்

தன்னை ராணுவத்தினர் வீட்டு காவலில் அடைத்து வைத்து இருந்ததாக காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Farooq Abdullah | வீட்டை விட்டு வெளியே வந்த ஃபரூக் அப்துல்லா.. அமித் ஷாவிற்கு எதிராக பேட்டி

    ஸ்ரீநகர்: தன்னை ராணுவத்தினர் வீட்டு காவலில் அடைத்து வைத்து இருந்ததாக காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பேட்டி அளித்துள்ளார்.

    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கப்படுவதற்கான சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட்டு வருகிறது. திமுக , காங்கிரஸ் கட்சிகள் லோக்சபாவிலும் மசோதாவை தீவிரமாக எதிர்த்தது.

    இந்த மசோதா தொடர்பான வாக்கெடுப்பில் காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் கட்சியின் தலைவர் எம்பி ஃபரூக் அப்துல்லா கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து ஃபரூக் அப்துல்லா எங்கே என்று காங்கிரஸ், திமுக எம்பிக்கள் பலர் கேள்வி எழுப்பினர்.

    என்ன பதில்

    என்ன பதில்

    இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஃபரூக் அப்துல்லாவை நாங்கள் கைது செய்யவில்லை. அவரை நாங்கள் வீட்டு காவலில் வைக்கவில்லை. ஃபரூக் அப்துல்லா அவராக வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். வீட்டை விட்டு வெளியே வர விருப்பமின்றி அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார், என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

    டிவிட்ஸ்

    டிவிட்ஸ்

    இந்த நிலையில் புதிய திருப்பமாக ஃபரூக் அப்துல்லா தனது வீட்டை விட்டு, கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார். போலீஸ் தடையை மீறி அவர் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தனது பேட்டியில் அமித்ஷாவுக்கு ஃபரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தனது பேட்டியில், காஷ்மீர் சிக்கலுக்குள்ளாகி இருக்கும்போது வீட்டுக்குள் முடங்கி இருப்பேனா?

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    நம்மை கொலை செய்ய பார்க்கிறார்கள். என்னுடைய வீட்டு கதவை அடைத்து வைத்துவிட்டனர். என் மகன் உமர் வீட்டிற்குள் கஷ்டத்தில் இருக்கிறார். அப்பாவி மக்களை ஜெயிலில் தள்ளி வருகிறார்கள். முதுகில் குத்தாதீர்கள், நெஞ்சில் சுடுங்கள்.

    என்ன கோபம்

    என்ன கோபம்

    அமித் ஷா பொய் சொல்கிறார், என்னை வீட்டு காவலில் வைத்து இருந்தனர். காஷ்மீர் மக்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் படும் கஷ்டம் உங்களுக்கு தெரியாது. இங்கே என்ன நடக்கிறது என்பதே மக்களுக்கு தெரியாது. நாங்கள் விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம்.

    போலீஸ் வந்தனர்

    போலீஸ் வந்தனர்

    ஃபரூக் அப்துல்லா பேசிக்கொண்டு இருக்கும் போதே போலீசார் அவரை அழைத்து சென்றனர். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஃபரூக் அப்துல்லா குறித்து அமித் ஷா லோக்சபாவில் பொய் சொல்லிவிட்டார். இதோ உண்மை வெளியாகி உள்ளது. அமித் ஷா மக்களை ஏமாற்றுகிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்து வருகிறார்கள்.

    English summary
    Home Ministry is lying in the Parliament that I'm not house-arrested, says J&K Former CM Farooq Abdullah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X