2020ல் பீகாரில் தேர்தல் எப்படி நடந்தது! நிதிஷ் குமார் ஆட்டத்தை கலைத்து போட்டது எப்படி தெரியுமா?
பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முறை இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை பீகாரில் எத்தனை கட்டங்களாகத் தேர்தல் நடந்தன. கடந்த முறை கூட்டணி எப்படி இருந்தது.. தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதியும் 2ம் கட்ட தேர்தல் நவம்பர் 11ம் தேதியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் மீது நாடு முழுக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே பீகாரில் கடந்த 2020 தேர்தல் களம் எப்படி இருந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பீகார் தேர்தல்
கடந்த 2020ம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் மொத்தம் மூன்று கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருக்கும் சூழலில், பல ஆண்டுகளாகவே இங்கு ஒரே கட்டமாகவே தேர்தல் நடந்து வருகிறது. பீகாரில் 243 தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டை விட 9 தொகுதிகள் மட்டுமே, அதிகமாக இருக்கும் போதிலும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பீகாரில் இன்னுமே பல கட்டங்களாகவே தேர்தல் நடந்து வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. முதலாம் கட்ட தேர்தல் 2020 அக்டோபர் 1ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ம் தேதி 94 தொகுதிகளுக்கு நடந்தது. தொடர்ந்து 3ம் கட்ட தேர்தல் 78 தொகுதிகளுக்கு பீகாரில் நடந்தது. 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்து 2020 நவம்பர் மாதம் 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.
என்டிஏ கூட்டணி
அப்போதை ஜேடியு- பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஜேடியு 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பாஜக 110 தொகுதிகளில் களமிறங்கியது. பீகாரில் 123 தொகுதிகளில் வென்றால் மட்டுமே பெரும்பான்மை கிடைக்கும் என்ற சூழலில், எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத வகையிலேயே என்டிஏ கூட்டணியில் சீட் பகிர்வு இருந்தது. இது தவிரச் சிறிய கட்சிகள் 18 தொகுதிகளில் போட்டியிட்டன.
எதிர்க்கட்சிகள் கூட்டணி
எதிர்க்கட்சிகள் மகா பந்தன் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டது. அதில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 144 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் களமிறங்கிய நிலையில், கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிஸ்ட்) 19 தொகுதிகளில் போட்டியிட்டது. சிபிஐ 6 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
கடந்த தேர்தலிலும் கூட போட்டி மிக நெருக்கமாகவே இருந்தது. எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. ஆர்ஜேடி 75 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டணியால் 110 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
ஆட்டத்தைக் கலைத்த நிதிஷ்குமார்
என்டிஏ கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 73 இடங்களில் வென்றது. 115 இடங்களில் போட்டியிட்ட நிதிஷ்குமார் கட்சியால் வெறும் 43 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அவர்களின் இதர கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களில் வெல்லவே என்டிஏ கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது. என்டிஏ கூட்டணியில் பாஜக அதிக இடங்களைப் பெற்ற போதிலும், நிதிஷ்குமார் முதல்வராகத் தொடர்ந்தார். பாஜக தலைவர்கள் இருவர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
இருப்பினும், 2022 ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி ஆர்டிஜே- காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தார். அப்போதும் அவரே முதல்வராகத் தொடர்ந்தார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், இந்தக் கூட்டணியும் 1.5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2024 ஜனவரி மாதம் அவர் மீண்டும் மகா பந்தன் கூட்டணியில் இருந்து விலகி என்டிஏ கூட்டணியில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications