For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோட்டலில் ரூம் போட்ட 2 பேர்.. மிட்நைட்டில் பார்த்தால்.. கட்டிலில் 3வதாக இன்னொருத்தர்.. அட கன்றாவியே

ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்தவர்கள் அறையில் அத்துமீறி நுழைந்துள்ளார் ஊழியர்

Google Oneindia Tamil News

போபால்: ஹோட்டலில் 2 பேர் ரூம் எடுத்து தங்கியிருந்தனர்.. நடுராத்திரி கட்டிலில் 3வது நபர் இருக்கிறார் எப்படி?

அமீரகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள ஒரு ஹோட்டலில், கணவன் மனைவி 2 பேர் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

அப்போது, திடீரென தங்கள் ரூமை யாரோ கண்காணிப்பதாக உணர்ந்துள்ளனர்.. அதனால் அதிர்ந்து போன தம்பதி இருவரும், அந்த நபர் யார் என்பதை கவனித்தபோது, அந்த மர்ம நபர் இவர்கள் 2 பேரையும் மறைந்திருந்து எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தது உறுதியானது..

லிஃப்ட் கேட்ட பெண்ணுடன் ஹோட்டலில் ரூம் போட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி.. ரெக்கார்டான வீடியோ.. பரபர கர்நாடகாலிஃப்ட் கேட்ட பெண்ணுடன் ஹோட்டலில் ரூம் போட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகி.. ரெக்கார்டான வீடியோ.. பரபர கர்நாடகா

 அத்துமீறல்

அத்துமீறல்

உடனடியாக அந்த மர்மநபரை பிடித்துவிட்டனர்.. அவர் அந்த ஹோட்டலில் கிளீனராக வேலை பார்ப்பவராம்-. யாராவது தம்பதி அந்த ஹோட்டலுக்கு வந்தால், இப்படித்தான், ரகசியமாக எட்டிப்பார்ப்பது இவரது கேவலமான வேலையாம்.. பிறகு அந்த கிளீனரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.. இது தொடர்பாக வழக்கும் பதிவானது.. ராஸ் அல் கைமா சட்ட மீறல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.. இதில் கிளீனர் குற்றவாளி என்று தீர்ப்பு தரப்பட்டு, 2 மாதம் ஜெயில் தண்டனையும் தந்தார்கள்.. ஆனால், அப்போதும் அந்த அரபு மனிதர் விடவில்லை..

 ஹோட்டல் ரூம்

ஹோட்டல் ரூம்

இது தொடர்பாக அப்பீலுக்கு போனார்.. நானும் என் மனைவியும் தனியுரிமைக்காக, குறிப்பிட்ட ஹோட்டலில் எடுத்த ரூமிற்கு கூடுதல் பணம் செலுத்தினோம்.. ஆனாலும் இப்படி அத்துமீறல் நடந்துள்ளது என்று வாதிட்டார்.. அரபு நபரின் வாதத்தை ஏற்ற சிவில் நீதிமன்றமும், பாதிக்கப்பட்டவருக்கு 50 ஆயிரம் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் அந்த கிளீனருக்கும் உத்தரவிட்டது.. இதுபோக அரபுநபரின் வக்கீல் பீஸையும் கட்ட வேண்டும் என்று அந்த கிளீனருக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஹோட்டல் ரூமில் எட்டிப்பார்த்ததுக்கே இப்படி ஒரு தண்டனை என்றால், நம்ம ஊரில் இதைவிட கேவலமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 அப்பாயிண்ட்மென்ட்

அப்பாயிண்ட்மென்ட்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் காண்ட்வா மாவட்டத்தில் மிக பிரபலமான ஹோட்டல் அது.. இங்கு போபாலை சேர்ந்த 2 பெண்கள் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.. ஒரு வேலை விஷயத்துக்காக இங்கே இவர்கள் வந்திருக்கிறார்கள்.. ஒரு பெண்ணுக்கு 35 வயது, இன்னொரு பெண்ணுக்கு 25 வயது.. பணி நிமித்தம் காரணமாக, திங்கட்கிழமை 2 பேருக்கும் அப்பாயிண்ட்மென்ட் தந்திருந்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

 கட்டிலில்

கட்டிலில்

நள்ளிரவு நேரம்.. 2 பெண்களுமே தூங்கிவிட்டனர்.. இதில் ஒரு பெண் திடீரென கண்விழித்தபோது, யாரோ ஒருவர் அவர்களுடன் கட்டிலில் படுத்து கொண்டிருப்பதை பார்த்து பதறியுள்ளார்.. பிறகு இன்னொரு பெண்ணும் இதை கண்டு அலறி சத்தமிட்டார்.. அந்த நபர், கட்டிலில் இந்த 2 பெண்களுக்கு நடுவில் வந்து படுத்துக் கொண்டிருந்தாராம்.. இந்த 2 பெண்களும் அலறி கதறியதில், அந்த நபர் ரூம் கதவை பூட்டிவிட்டு வெளியே ஓடிவிட்டார்... இவ்வளவு தைரியமாக, ரூமுக்குள் வந்து கட்டிலில் படுக்கிறார் என்றால், நிச்சயம் அந்த ஹோட்டலை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கும் என்று நம்பப்பட்டது.. பிறகு இரண்டு பெண்களில் ஒருவர் போலீசுக்கு தகவலளித்திருக்கிறார்.

அடையாளம்

அடையாளம்

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ரூமுக்குள் சென்றவர் யாராக இருக்கக்கூடும் என்பதை கண்டறிய முற்பட்டனர்.. அதனால், அந்த ஹோட்டல் ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்தனர்.. அந்த 2 பெண்களையும் அடையாளம் காட்ட சொன்னார்கள்.. அப்போது தங்களுடன் படுக்கையறையில் அத்துமீறிய நபர் அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள்.. போலீஸாரிடம் அவரை அடையாளம் காட்டியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, அந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. அதை பற்றி போலீசார் சொன்னதாவது:

 ஜன்னல் கண்ணாடி

ஜன்னல் கண்ணாடி

"தனியார் துறையில் வேலை செய்யும் 2 பெண்கள் ஹோட்டலில் வந்து ரூம் போட்டுள்ளனர்.. கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு தூங்கி உள்ளனர்.. இவர்கள் 2 பேரும் தனியாக ரூமுக்குள் இருப்பதை ஹோட்டல் ஊழியர் பலிராம் என்பவர் கவனித்திருக்கிறார். இவருக்கு 22 வயதாகிறது.. வெயிட்டராக இருக்கிறாராம்.. நள்ளிரவு நேரம்வரை காத்திருந்தவர், அந்த ஜன்னல் கண்ணாடி வழியாக, அவர்களது ரூமுக்குள் சத்தமில்லாமல் நுழைந்திருக்கிறார்.. அவர்களுடன் சேர்ந்து இவரும் கட்டிலின்மீது ஏறி படுத்து, பாலியல்ரீதியில் அத்துமீறுவதற்கு முயன்றுள்ளார்..

"பலி"ராம்

ஆனால் அதற்குள் அவர்களில் ஒரு பெண் விழித்து கொண்டதால், வசமாக பிடிபட்டுவிட்டார்.. அவர் மீது ஐபிசி பிரிவு 354, 458-ன் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் அத்துமீறி நுழைந்ததற்கான வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.. இதற்கு முன்பு வேறு எந்த ஓட்டலிலாவது வேலை பார்த்தாரா? இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை விசாரித்து வருகிறோம்" என்றனர்... தற்போது அந்த வெயிட்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்களாம்.. இனி "பலி"ராம் கதை அவ்ளோதான் போல..!

English summary
How did hotel staff enter into the hotel room and what happened in Madhya pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X