For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் "குரு"வே சொல்லிட்டார், அதுக்கு அப்பீலே இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் சு. சாமி!

Google Oneindia Tamil News

டெல்லி: பாலி நாரிமன்தான் எனக்கு குரு. அவரிடமிருந்துதான் நான் சட்டமே கற்றுக் கொண்டேன். அவரே உத்தரவாதம் கொடுக்கும்போது நான் மறுத்துப் பேச மாட்டேன் என்று நேற்று உச்சநீதிமன்றத்தில் கீழே விழுந்தும் மீசை இல்லாத தனது மேலுதட்டில் மண் ஒட்டவில்லை என்பது போல பலே பல்டி அடித்துப் பேசியுள்ளார் சுப்பிரமணியம் சாமி.

உச்சநீதிமன்றத்தில் நேற்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதாடினார். சுப்பிரமணியம் சாமி அவரே நேரடியாக வாதாடினார்.

நீதின்றத்தில் நடந்த வாதம் குறித்த ஒரு தொகுப்பு...

ஊழல் வழக்கு

ஊழல் வழக்கு

தலைமை நீதிபதி: இது ஊழல் தொடர்பான வழக்கு. ஊழல் என்பது மனித உரிமையை மீறும் செயல். எனவே இதுபோன்ற வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஏதேனும் இருந்தால் எங்கள் பார்வைக்கு முன்வைக்கலாம்.

பாலி நாரிமன் வாதம்

பாலி நாரிமன் வாதம்

மக்கள் பிரதிநிதியான ஒருவர் ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அந்த தண்டனை அறிவிக்கப்பட்ட 30 நாட்களில் அந்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான கிரிமினல் மேல் முறையீட்டை அந்த மாநில ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாம். அந்த மேல் முறையீடு சட்டரீதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உடனே அந்த குற்றவாளி தண்டனை குறைப்புக்கும் ஜாமீனுக்கும் உரியவர் ஆகிறார்.

பிழை செய்த நீதிபதி சந்திரசேகரா

பிழை செய்த நீதிபதி சந்திரசேகரா

இது சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்துள்ள ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வகுத்துள்ள நெறிமுறையாகும். இதை கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்திரசேகரா கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற பிழையினை செய்துள்ளார். இது நெறிமுறைக்குப் புறம்பான செயலாகும். எனவே கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

இழுத்தடித்தது சரியா

இழுத்தடித்தது சரியா

தலைமை நீதிபதி: நீங்கள் மேற்கோள் காட்டிய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது தண்டனை மீதான தடைக்கு உங்கள் கட்சிக்காரருக்கு உரிமை இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் உங்கள் கட்சிக்காரர் இந்தியாவில் உள்ள தலைசிறந்த வழக்கறிஞர்களை கீழமை நீதிமன்றங்களிலும், ஐகோட்டுகளிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அமர்த்தி இந்த வழக்கை 18 வருடங்களாக இழுத்தடித்த விதம் எங்களுக்கு தெரியும். உங்கள் கட்சிக்காரரை ஜாமீனில் விடுவித்தால் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை நீங்கள் 20 வருடங்களுக்கும் மேல் இழுத்தடிக்க மாட்டீர்கள் என்று நாங்கள் ஏன் கருதக்கூடாது?

நீதிபதி ஏ.கே.சிக்ரி

நீதிபதி ஏ.கே.சிக்ரி

அப்படி 20 வருடங்களுக்கு ஒரு வழக்கை நீங்கள் இழுத்தடித்தால் நீதியின் நிலை என்ன?.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்

பாலி நாரிமன்: நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அந்த வழக்குகளைப் பற்றியோ மற்ற வழக்கறிஞர்கள் பற்றியோ நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை. இந்த குறிப்பிட்ட மனு மீதான விசாரணையில் என் கட்சிக்காரர் சார்பாக நான் ஆஜராகி இருக்கிறேன். இந்த நீதிமன்றம் என்ன உறுதிமொழி கேட்டாலும் அதனை பிரமாண பத்திரம் வடிவில் அவர் சார்பாக தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன். எந்த நிபந்தனை வைத்தாலும் நான் கட்டுப்பட தயாராக இருக்கிறேன்.

வயது, உடல் நிலையைப் பாருங்கள்

வயது, உடல் நிலையைப் பாருங்கள்

என்னுடைய கட்சிக்காரர் ஜெயலலிதாவின் உடல்நிலை, வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டாவது அவர் சிறையில் இருந்து வெளியில் வர அனுமதிக்க வேண்டும். அவரை மருத்துவ காரணங்கள் தவிர வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அவருக்கு நிபந்தனை விதித்தாலும் சரியே. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் சரீன் மற்றும் பஞ்சாப் அரசு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் என்னுடைய கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கு தண்டனையின் மீதான தடைக்கு உரிமை உள்ளது.

பேச எழுந்த சு.சாமி

பேச எழுந்த சு.சாமி

அப்போது சுப்பிரமணியம் சாமி குறுக்கிட்டுப் பேச எழுந்தார். இதைப் பார்த்த சசிகலா வக்கீல் கே.டி.எஸ். துள்சி, குறுக்கிட்டு, இந்த மனுவின் மீதான விசாரணையில் வாதாட சுப்பிரமணியசாமிக்கு எந்த வகையில் முகாந்திரம் உள்ளது? என்றார்.

இவர்தானே மூலப் புகார்தாரர்

இவர்தானே மூலப் புகார்தாரர்

அதற்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, சுப்பிரமணியசாமிதான் இந்த மூல வழக்கில் அடிப்படை புகார்தாரர். எனவே அவருக்கு முகாந்திரம் உள்ளது. இதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் தரப்பில் ஏதேனும் வாதங்கள் இருந்தால் முன்வைக்கலாம்.

சு.சாமி பேச்சு

சு.சாமி பேச்சு

இது ஊழலுக்கு எதிரான வழக்கு. ஜெயலலிதா தரப்பில் இந்த வழக்கை 18 ஆண்டு காலம் இழுத்தடித்தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் என்னுடைய வீட்டை தாக்கினார்கள். என்னைப் பற்றி மிகவும் கேவலமாக போஸ்டர்கள் ஒட்டினார்கள். நீதிபதி குன்காவை அவதூறாக சித்தரித்து போஸ்டர்களை ஒட்டினார்கள். கர்நாடக நீதிபதிகள் ரத்தினகலா மற்றும் சந்திரசேகராவை அவதூறாக சித்தரித்தார்கள். நீதிமன்றத்தை அவமதித்தார்கள். நீதிபதி மைக்கேல் டி.குன்காவின் தீர்ப்பை எரிக்க முயன்றார்கள். சில இடங்களில் எரிக்கவும் செய்தார்கள். தமிழகத்தில் அங்காங்கு வன்முறை ஏற்பட்டது. இவை அனைத்தையும் ஜெயலலிதான் தூண்டினார்.

ஆதாரம் இருக்கா சாமி

ஆதாரம் இருக்கா சாமி

தலைமை நீதிபதி: இத்தனை சம்பவங்களையும் ஜெயலலிதாதான் தூண்டிவிட்டு செய்யவைத்தார் என்பதற்கு ஆதாரமான உறுதியான ஆவணங்களை தாக்கல் செய்து உங்களால் வாதிட முடியுமா?

ஒப்பற்ற தலைவியாச்சே

ஒப்பற்ற தலைவியாச்சே

சு.சாமி: அ.தி.மு.க. கட்சியின் ஒப்பற்ற தலைவியே ஜெயலலிதாதான். அவருடைய கவனத்தில் இல்லாமல் இவை அனைத்தும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை.

அது இருக்கட்டும்

அது இருக்கட்டும்

தலைமை நீதிபதி: அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நாம் தண்டனை தடை விதிப்பது குறித்தும் ஜாமீன் வழங்குவது குறித்தும் உங்களுடைய வாதம் என்ன? உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க உத்தரவு வழங்கப்படும்.

வருத்தம் தெரிவிக்கிறேன்

வருத்தம் தெரிவிக்கிறேன்

பாலி நாரிமன்: அரசியல் முறையின் மாண்பை நாம் காப்பாற்ற வேண்டும். நடந்த சம்பவங்களை பார்க்கும் போது அதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஒரு வழக்கறிஞராக என்னாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

குருவே சொல்லிட்டார்...!

குருவே சொல்லிட்டார்...!

சு.சாமி (சிரித்தபடி): எனக்கு குருவே பாலி நாரிமன்தான். அவரிடம் இருந்துதான் நான் சட்டத்தை கற்றுக் கொண்டேன். அதனால் அவர் உத்தரவாதம் அளித்தால் அதுவே எனக்கு போதுமானது.

6 வாரத்திற்குள்

6 வாரத்திற்குள்

பாலி நாரிமன்: நாங்கள் 6 வாரத்துக்குள் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்துக்கும் எதிர் தரப்புக்கும் சமர்ப்பித்து விடுகிறோம். மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை முடித்துக்கொள்ள உத்தரவிட்டாலும் ஏற்றுக் கொள்கிறோம்.

தீர்ப்பு

தீர்ப்பு

தலைமை நீதிபதி: சரீன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் உங்கள் கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கவும், அவருக்கு ஜாமீன் வழங்கவும் உரிமை உள்ளது. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. அதாவது அவர் தப்பித்துப் போய்விடுவார்; விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார்; அவரால் இந்த விசாரணைக்குக் குந்தகம் ஏற்படும் என்பவை போன்ற காரணங்களால் மட்டுமே இந்த தண்டனை மீதான இடைக்கால தடையை நிறுத்தி வைக்கமுடியும். ஜாமீனையும் வழங்க முடியாது.

நானும்தான் கன்னடர்

நானும்தான் கன்னடர்

அவை போன்ற பிரச்சினைகள் இந்த வழக்கில் எழவில்லை. சுப்பிரமணியசாமி எடுத்து வைத்த வாதங்களையும் நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்கிறோம். இந்த வழக்கில் நாங்கள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறோம். அந்த உத்தரவின்படி வருகிற டிசம்பர் மாதம் 18-ந் தேதி அன்று இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும். இன்னொரு விஷயம் நானும் கன்னடர்தான். நீதிபதி மைக்கேல் டி.குன்காவை எதிர்த்து போஸ்டர் ஒட்டும் உங்கள் கட்சிக்காரரின் தரப்பினர் என்னையும் அப்படி விமர்சித்து போஸ்டர் ஒட்ட மாட்டார்களா?

தயாராக இல்லை

தயாராக இல்லை

இவற்றை கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருந்தாலும் நாங்கள் அதற்கு தயாராக இல்லை. ஆனால் இவை போன்ற எந்தவிதமான அசம்பாவிதங்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது. 6 வாரம் அவகாசம் கேட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு 8 வாரம் அவகாசம் அளிக்கிறோம். 17.12.2014-ந் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கர்நாடக ஐகோர்ட்டில், 35,000 பக்கங்கள் இருப்பதாகக் கூறும் ஆவணங்களை எந்தவிதமான தாமதமும் ஒத்திப்போடுதலும் இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கை தொடங்குவதற்கான வேண்டுகோள் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்யுங்கள். எந்தவிதமான காரணத்தை கொண்டும் அந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை ஒத்திப்போடுவதற்கு உங்கள் கட்சிக்காரர் முயற்சிக்கக் கூடாது.

டிசம்பர் 18ம் தேதிக்குள்

டிசம்பர் 18ம் தேதிக்குள்

இது குறித்து நீங்கள் எடுத்த நடவடிக்கை பற்றி சுப்ரீம் கோர்ட்டில் 18-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டாலும் ஜெயலலிதா மற்றும் பிற மனுதாரர்களின் ஜாமீனை ரத்து செய்து விடுவோம். விசாரணை தொடங்கிய பிறகு ஒரு ஒத்திவைப்புக்குக் கூட நீங்கள் முயற்சிக்கக்கூடாது.

சாமியை துன்புறுத்தக் கூடாது

சாமியை துன்புறுத்தக் கூடாது

சுப்பிரமணிய சாமியையும் இது தொடர்பான வழக்கில் மனுக்களை தாக்கல் செய்தவர்களையும் எந்தவகையிலும் துன்புறுத்தக் கூடாது. அதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீதிமன்றத்தை நாடினால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதனுடைய முடிவு விபரீதமாக இருக்கும். இப்போது அளிக்கும் ஜாமீனை ரத்து செய்ய தயங்கமாட்டோம். இவற்றை நீங்கள் உங்கள் கட்சிக்காரரிடம் அறிவுறுத்துங்கள்.

உத்தவாரத்தை ஏற்கிறோம்

உத்தவாரத்தை ஏற்கிறோம்

மூத்த வழக்கறிஞரான நீங்கள் அளிக்கும் உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்கிறோம். எனவே, இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து அனைவருக்கும் ஜாமீன் வழங்குகிறோம். கர்நாடக ஐகோர்ட்டில் நடக்கும் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் வக்கீல்கள் ஆஜரானால் போதும். உங்கள் கட்சிக்காரர் ஆஜராக தேவையில்லை என்று தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார்.

English summary
The details of the arguements in the Jaya case held in the SC yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X