டெல்லி லோக் நாயக் பவனில் பயங்கர தீ விபத்து- தீயை அணைக்க தீவிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைத்துள்ள லோக் நாயக் பவனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி கான் மார்க்கெட் பகுதியில் உள்ள லோக் நாயக் பவன் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் அமலாக்கத்துறை உள்ளிட்ட பல மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

Huge Fire At Delhi's Lok Nayak Bhawan

இங்கு மின்கசிவினால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று மாலையில் ஏசி இணைப்பில் மின்கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவியதில் கரும்புகை வெளியானது. சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A massive fire has broken out at Lok Nayak Bhawan in the heart of Delhi, which houses many government offices.At least 26 fire engines are trying to put out the blaze.
Please Wait while comments are loading...