ஹைதரபாத்தில் 4வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட காம கொடூரன் கைது
ஹைதராபாத்: 4 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட காமக்கொடூரனை ஹைதராபாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரத்தில் மகளைப் போன்ற அந்த சிறுமிதான் தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாக பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளான். தன் வீட்டிற்கு வந்த சிறுமியை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியது அந்த நபர்தான் என்று சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பெண்களிடமும், குழந்தைகளிடமும் இயல்புக்கு மாறான உறவு வைத்திருந்த அந்த வக்ரம் பிடித்த காமக்கொடூரனின் பெயர் மொஹம்மது அக்ரம் கான் என்பதாகும். 46 வயதாகும் அவன் ஹைதராபாத்தில் ஜஹானுமா பகுதியில் வசித்து வந்தான். ரியல் எஸ்டேட் மூலம் பணம் சம்பாதித்த அவனுக்கும் அவனது மனைவிக்கம் தகராறு ஏற்படவே இருவரும் தனித்தனியாக அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவனது வீட்டில் 4 பேர் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.

அக்ரம் கானுக்கு பல பெண்களிடம் தொடர்பு இருந்ததாக கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவனது மனைவி, அவனுக்குத் தெரியாமல், அக்ரம் கான் வீட்டில் ரகசிய சிசிடிவி கேமராவை நிறுவினாள். ஒரு நான்கு வயது பெண்ணை பாலியல் ரீதியில் தாக்கும் போது, அது அவனையும் அறியாமல் பதிவாகியது.
கணவனின் வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை பார்ப்பதற்காக டெக்னிஸியனைக் கூப்பிட்டு, பதிவாகியுள்ளவற்றைக் காண்பிக்கச் சொன்னபோது, அந்த விவகாரம் தெரிய வந்தது. அக்ரம் கான் , சிறுமியை கூப்பிடுவது, பேசுவது, சாக்கிலெட் கொடுப்பது, பிறகு தகாத முறையில் செக்ஸில் ஈடுபடுவது என்று எல்லாம் தெரிந்தது.
இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி, முதலில் இதை மற்றவர்களிடம் சொல்ல தயங்கினாள். மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப் பட்டதற்கு கொதித்த அப்பெண், எப்படி ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதைப் பார்த்த பிறகும், எப்படி வெளியே சொல்லவில்லை என்பது பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. எனினும்
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் டெக்னீசியன் மூலம் போலீசுக்கு தெரியவரே அக்ரம் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.
தன்னுடைய நடவடிக்கைகள் வெளியே தெரிந்து விட்டதை அறிந்த அக்ரம் கான் கடந்த ஒரு மாத காலமாக வீட்டுக்கு வராமல், தலைமறைவாகிவிட்டான் எனினும் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசாரின் கையில் சிக்கினான் காமக்கொடூரன் அக்ரம் கான்.
அவனை பிடித்து விசாரித்தபோது, தான் ஒரு பிடோபைல் என்பதனை ஒப்புக்கொண்ட அவன், முதலில் தன் மீது எந்த குற்றமும் இல்லை, அந்த சிறுமிதான், மிகவும் அருகில் வந்தாள், தன்னை கட்டிப்பிடித்தால் என்றும் கூறினான். ஆனால், வீடியோ பதிவில் அவனது செயல் அப்பட்டமாகத் தெரிந்ததால், போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். இதனால், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் 377 மற்றும் பிரிவு 6 போக்சோ சட்டம் [Section 6 of POCSO (Protection of Children from Sexual Offenses) Act] முதலிவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, அவன் கைது செய்யப்பட்டான்
போலீஸாரிடம் வீடியோ பற்றி தெரிவிப்பது பற்றி இரண்டு விதமாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவை அவனது நண்பர் காபி எடுத்ததாகத் தெரிகிறது. இதை அவர் போலீஸீடம் ஒப்படைத்ததால் கைது செய்யப்பட்டதாக, முதலில் செய்தி வந்தது. பிறகு, அந்த வீடியோ பதியைப் பார்த்த மனைவியால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டான் என்றும் செய்தி உள்ளது.
ஹைதராபாத்தில் போலீஸாரார் குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக பல இடங்களில் சிசிடிவிகளைப் பொறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது, சிசிடிவி டெக்னிசியன்களுக்கும், குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அவ்வாறு நடந்தால், எப்படி அறிவது போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியபோது, ஒமர் என்ற சிசிடிவி டெக்னிசியன் இதைப் பற்றி கூறினான். குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவும் போது, கண்ட காட்சியை விவரித்தான் என்றும் கூறப்படுகிறது. பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாது சிறுமி மீது பழிபோட்டு தப்பிக்க நினைத்த காமக் கொடூரானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications