3-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 18 மாத கைக்குழந்தை..நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிறந்து 18 மாதம் ஆன குழந்தை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பகதூர்புரா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 3வது மாடியிலிருந்து குழந்தை ஒன்று கீழே வீசப்பட்டுள்ளது. கீழே சாலையில் விழுந்த அந்த 18 மாத குழந்தையை நபர் ஒருவர் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் குழந்தை பலத்த காயம் அடைந்துள்ளது. அதனால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெஞ்சை பதறவைக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hyderabad Old City baby child fell down from the balcony of a building
Please Wait while comments are loading...