ஆமா நான் சிவ பக்தன்... கோவில் கோவிலாத்தான் போவேன்.... பாஜகவுக்கு ராகுல் பதிலடி

Subscribe to Oneindia Tamil

பெசார்ஜி: தாம் ஒரு சிவபக்தன் என்பதால் கோவில்களுக்கு செல்வதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்திருக்கிறார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தை துவாரகாவில் உள்ள துவாரகேஷ் கோவிலில் தரிசனம் முடித்த பின்பே தொடங்கினார் ராகுல் காந்தி. திங்கட்கிழமையான நேற்று பதானில் உள்ள வீர் மெக்மயா ஆலயத்திற்குச் சென்றார். அதன் பிறகு பிரச்சாரம் செய்துவிட்டு வாராணாவில் உள்ள ஓர் ஆலயத்திற்கும், பெசார்ஜியில் உள்ள ஆலயத்திற்கும் சென்று வழிபாடு நடத்தினார் ராகுல் காந்தி.

I am Lord Shiva Devotee says Congress Leader Rahul Gandhi at Gujarat

அங்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, விமர்சிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும்; நான் ஒரு சிவபக்தன் அதனால் கோவிலுக்கு போவதில் ஒன்றும் தவறு இல்லை என்று கூறினார். முன்னதாக பா.ஜ.க நிர்வாகிகள், ராகுல் கோவிலுக்குப் போவது இந்துக்களின் ஓட்டுகளைக் குறிவைத்துத்தான் என்று விமர்சித்து இருந்ததனர்.

திங்கட்கிழமை தனது பிரச்சாரத்தை வான்கர் என்னும் தலித் சமுதாயத்தினர் வணங்கும் வீர் மெக்மயா ஆலயத்தில் இருந்து தொடங்கினார். அதன் பிறகு கோடியார் மா மற்றும் மா பாகுச்சார் ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டார்.

அது போல சனிக்கிழமை அக்ஸர்தாம் ஆலயத்திற்கும், புகழ்பெற்ற அம்பாஜி ஆலயத்திலும் ராகுல் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
I am Lord Shiva Devotee says Congress Leader Rahul Gandhi. Later BJP cadres Criticizing his Regular Temple Visits in Gujarat.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற