பிறந்து 45 நாட்களே ஆன என் குழந்தையை காப்பாத்துங்க: உதவி கேட்டு தந்தை கதறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குறை பிரசவத்தில் பிறந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தையை காக்க உதவி செய்யுமாறு அவரின் தந்தை மன்றாடுகிறார்.

மும்பை கர்லா பகுதியை சேர்ந்தவர் நசீர் அகமது ஷேக். அவரது மனைவி சீமா. இருவருக்கும் பெற்றோர் இல்லை. நசீரின் மாத வருமானம் ரூ. 8 ஆயிரம். சீமா வேலைக்கு செல்லவில்லை.

I’m Struggling To Save My 45-Day-Old Baby Girl

சீமாவுக்கு 45 நாட்களுக்கு முன்பு குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பமாவதில் பிரச்சனை இருந்த சீமா அதிசயமாக கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் 7வது மாதத்திலேயே பிரசவ வலி வந்து அழுதார்.

மருத்துவமனையில் சேர்த்தால் தாய், சேயின் உயிருக்கு ஆபத்து என்றார்கள். ஒரு வழியாக அறுவை சிகிச்சை செய்து பெண் குழந்தையை வெளியே எடுத்தார்கள். ஆனால் அந்த குழந்தையை பெற்றோரின் கண்ணில் காட்டவில்லை.

I’m Struggling To Save My 45-Day-Old Baby Girl

குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. அதை அதன் பெற்றோர் இதுவரை தொட்டது இல்லை. கதவின் கண்ணாடி வழியாக மட்டுமே பார்க்கிறார்கள். குழந்தைக்கு செப்சிஸ் என்னும் பிரச்சனை உள்ளது. தொற்றை போராடும்போது குழந்தையின் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.

அந்த பச்சிளம் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதுடன் அவ்வப்போது ரத்தமும் ஏற்றப்படுகிறது. பச்ச உடம்பில் டியூப்களாக இருப்பதை பார்த்து அதன் பெற்றோர் அழுகிறார்கள்.

I’m Struggling To Save My 45-Day-Old Baby Girl

குழந்தையின் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் நசீர் திணறுகிறார். உதவி கேட்டு உறவினர்களுக்கு போன் செய்தும் பலனில்லை. இதை அடுத்தே அந்த பச்சிளம் குழந்தையின் உயிரை காக்க தயாள குணமுள்ள உங்களிடம் உதவி கேட்டு மன்றாடுகிறார்.

Ketto.org மூலம் உதவி செய்து தனது மகளின் உயிரை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறா் நசீர்.

English summary
A poor father is requesting kind hearted people to save his extremely premature born baby girl who is struggling for life in a hospital.