For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் ஐபிஎம் ஊழியை கொலை: 3 மணிநேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீஸ்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த ஐபிஎம் ஊழியை குசும் ராணி சிங்க்ளா சமூக வலைதளம் மூலம் பழக்கமான நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குசும் ராணி சிங்க்ளா(31). ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நொய்டாவில் பணியாற்றி வந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Kusum Rani

தென்கிழக்கு பெங்களூரில் உள்ள காடுகோடியில் உள்ள மகாவீ்ர் கிங்ஸ் அபார்ட்மென்ட்டில் தோழியுடன் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்த தோழி குசும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குசுமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தனர்.

குசும் லேப்டாப் வயரால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கூரான ஆயுதத்தாலும் தாக்கப்பட்டிருக்கிறார். போலீசார் 3 மணிநேரத்தில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்தனர்.

குசும் கடந்த 19 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் ஹரியானாவைச் சேர்ந்த சுக்பிர் சிங்குடன் நட்பு பாராட்டியுள்ளார். சுக்பிர் கடந்த செவ்வாய்க்கிழமை ஹரியானாவில் இருந்து பெங்களூர் வந்துள்ளார். அபார்ட்மென்ட்டுக்கு வந்த அவருக்கு குசும் மதிய உணவு வாங்கிக் கொடுத்துள்ளார்.

சுக்பிர் குசுமிடம் ரூ.50 ஆயிரம் பணம் கேட்க அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுக்பிர் குசுமை கொலை செய்துவிட்டு ஹரியானாவுக்கு சென்றுவிட்டார். போலீசார் ஹரியானா சென்று சுக்பிரை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் உள்ள போஸ்ட்டுகள் மற்றும் செல்போன் எண்கள் ஆகியவற்றை வைத்து தான் போலீசார் சுக்பிரை கண்டுபிடித்துள்ளனர்.

English summary
31-year old IBM employee Kusum Rani Singla was murdered by her social media friend in Bangalore. Police found out the culprit in just three hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X