ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமைந்தால்.. யார் யாருடன் கைகோர்ப்பார்கள்?
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுவதால் தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால் எந்தக் கட்சி யாருடன் கைகோர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, தற்போது சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கியுள்ள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 46 இடங்களில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும். மொத்தம் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
எக்சிட் போல் முடிவுகளில், பெரும்பாலும் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது. பாஜக ஜம்மு மாகாணத்தில் அதிக இடங்களை பிடித்தாலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவர்கள் படுதோல்வியை சந்திப்பார்கள் என்றே எக்சிட் போல் முடிவுகளில் கூறப்பட்டது.
நயா காஷ்மீர் என்ற முழக்கத்துடன் பாஜக ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பணியாற்றியது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 5 பாஜக ஆதரவாளர்கள் கவர்னர் நியமனம் மூலம் எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
எக்ஸிட் போல் கருத்து கணிப்பின்படி எந்தக் கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே, தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அதனால், காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேசமயம், பாஜக இதுவரை தனிப்பெரும்பான்மையுடன் ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்தது இல்லை. 2014 தேர்தலுக்கு பிறகு, பாஜக மக்கள் ஜனநாய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்தது. 2018 ஆம் ஆண்டில் கூட்டணி பிரிந்து ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் பாஜக ஆட்சியமைப்பதற்காக கவர்னர் மனோஜ் சின்ஹா செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் மெஹபூபா முப்தி மற்றும் பாஜக கூட்டணி கவிழ்ந்தது. அதனால், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, 5 பாஜக ஆதரவாளர்கள் கவர்னர் நியமனம் மூலம் எம்எல்ஏவாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 30 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் சுயேட்சை கட்சிகளுடன் பேச்சு வார்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பாஜகவும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications