முறை தவறிய உறவால் கர்ப்பம்.. ஆசிரியை உயிருக்கு எமனாக மாறிய மாணவன்..அயோத்தியில் பரபரப்பு

பிளஸ் 2 மாணவன் ஒருவனே ஆசிரியை உயிருக்கு எமனாக மாறியுள்ளான். முறை தவறிய உறவு உயிரை பறித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

அயோத்தி: பள்ளி மாணவனுடன் முறை தவறிய உறவில் இருந்த ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டார். பள்ளி மாணவனே அந்த ஆசிரியை உயிருக்கு எமனாக மாறிய சம்பவம் அயோத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஆசிரியை உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்ட அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி கணவர், தாயாருடன் வசித்து வந்தார் அந்த ஆசிரியை. அவரது கணவரும் ஆசிரியர்.

அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்திலுள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டது. அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டது. முறையற்ற இந்த பழக்கத்தினால் அந்த ஆசிரியை கர்ப்பமானார். இது அந்த மாணவனுக்கு தெரியவே, அதிர்ச்சியடைந்த மாணவர் ஆசிரியையுடன் பேசுவதை தவிர்த்தார். உறவை முறித்துக்கொள்வோம் என்று மாணவன் கூறவே அதை ஏற்க முடியாது என்று ஆசிரியை கூறினார்.

ஆசிரியை கொலை

ஆசிரியை கொலை

கடந்த ஜூன் 1ஆம் தேதியன்று ஆசிரியை கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளி கூர்மையான ஆயுதத்தால் பலமுறை குத்தியதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ஆசிரியை வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் 50 ஆயிரம் ரூபாயை கொலையாளி எடுத்துக்கொண்டு போயிருந்தார்.

கொலையாளி யார்

கொலையாளி யார்

கொலையாளி யார் என்று காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஆசிரியை வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் சந்தேகத்திற்கு இடமான முறையில் டி.சர்ட் அணிந்து கொண்டு நடமாடியது தெரிய வந்தது. அந்த டி சர்ட்டில் இருந்த நிறுவனத்தை கொண்டு விசாரித்தனர். அது பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவன் என்பது தெரியவந்தது. மாணவனை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அயோத்தி போலீஸ் டிஐஜி ஏபி சிங், ஆசிரியை கொலை செய்த மாணவன் கைது செய்யப்பட்டான். கொலை செய்த நாளில் மாணவன் அணிந்திருந்த டி சர்ட் காட்டிக்கொடுத்தது. மாணவனுக்கும் ஆசிரியைக்கும் இடையேயான முறை தவறிய உறவே கொலைக்கு காரணமாக அமைந்தது.

கொலைக்கு காரணம்

கொலைக்கு காரணம்

உறவை முறித்துக்கொள்ள மாணவன் விரும்பியும் ஆசிரியை அவனை மிரட்டியுள்ளார். இருவருக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தி விடுவதாக ஆசிரியை தொடர்ந்து மிரட்டவே, அதன் காரணமாக மாணவன் கொலை செய்துள்ளார். காவல்துறையினர் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அயோத்தி போலீஸ் டிஐஜி ஏபி சிங் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+