சிறையில் டிவி, டைல்ஸ் போட்ட டாய்லெட், கட்டில் என ஜமாய்க்கும் லாலு
ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி மத்திய சிறையில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரது எண் 3312 ஆகும்.
சிறைக்குள் இருந்தாலும் அவருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.

டைல்ஸ் பாத்ரூம்
லாலுவுக்கு டைல்ஸ் போட்ட பாத்ரூம் உள்ள அறை ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

டிவி
லாலுவின் அறையில் டிவி, பெட், பத்திரிக்கைகள், கட்டில், கொசு வலை ஆகியவை உள்ளதாம். கொசு வலையில் தூங்கி அவருக்கு பழக்கம் இல்லாததால் இரண்டு லிக்விடேட்டர்கள் கொடுத்துள்ளனர்.

வெளியில் இருந்து உணவு
லாலுவை சந்திக்க வருபவர்கள் அவருக்கு பெரிய உணவகங்களில் இருந்து உணவு வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார்களாம். அவருக்கு உணவு சமைத்துக் கொடுக்க இரண்டு பேர் உள்ளார்களாம். மேலும் அவருக்கு பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன் வகைகளும் வழங்கப்படுகிறதாம்.

நினைத்தால்
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் தான் சிறையில் இத்தனை வசதிகளாம். அவர்கள் நினைத்தால் சிறை அதிகாரியிடம் அனுமதி வாங்கி வெளியில் இருந்து உணவு பெற்று சாப்பிடலாமாம். மேலும் அவர்கள் வெளியில் இருந்து புத்தகங்கள், உடைகள், பத்திரிக்கைகள் ஆகியவற்றையும் அனுமதி பெற்று வாங்கிக் கொள்ளலாமாம்.












Click it and Unblock the Notifications