For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிறைய வந்தாங்க.. எல்லாமே போயிட்டாங்க.. பாதியாக சரிந்த கேரளத்து பெண் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: பெண் கல்வி மேம்பட்டு உள்ள கேரளாவில் பெண் அரசியல்வாதிகள் கோலோச்ச முடியவில்லை. போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்கும் பெண்கள் எண்ணிக்கை, குறிப்பிட்ட கால கட்டத்தில் பாதியாக குறைந்துவிட்டது.

கேரள சட்டசபையில் 1996ம் ஆண்டில் 10.23 சதவீதமாக இருந்த பெண் எம்எல்ஏக்கள் விகிதம், 2016ல், 6.06 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

In Kerala, Women Surge Into Politics—And Fail

140 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட கேரள சட்டசபையில் இவ்வாண்டு நடந்து முடிந்த தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 8 பேர் மட்டும் பெண்கள். அதாவது, மொத்த உறுப்பினர் பலத்தில், 1 சதவீதம் கூட பெண்கள் இல்லை. 2011 சட்டசபை தேர்தலில் 7 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரம் 2011ல் 83 பெண்கள் போட்டியிட்ட நிலையில், இவ்வாண்டு நடந்த தேர்தலில் 105 பெண்கள் போட்டியிட்டனர். போட்டியிடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், அவர்களால் அரசியலில் தாக்குப்பிடித்து வெற்றி பெற முடியவில்லை.

ஆண்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள அரசியலில், கேரளா போன்ற முற்போக்கு மாநிலத்தில் கூட பெண்களால் சாதிக்க முடியவில்லை என்பதையே, இந்தியா ஸ்பென்ட் அமைப்பு வெளிக்கொண்டுவந்த இந்த புள்ளி விவரம் எடுத்துக்கூறுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், நடந்து முடிந்த தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதம் 78 ஆகும், ஆண்களின் 76 சதவீதமாகவும்தான் இருந்தது. இருப்பினும் பெண்களே, பெண்களை எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டவில்லை என்பதும் கவனிக்க தக்கது.

English summary
Over 20 years and five assembly elections-as women became better educated, led a variety of popular movements, voted in and contested elections in ever greater numbers in Kerala-the number of directly elected female legislators has steadily declined, according to our analysis of electoral data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X